ஓடும் ரயிலில் தங்கக் கட்டிகள் கொள்ளை: ஒருவன் பிடிபட்டான்
ஈரோடு:
சென்னை- கோவைரயிலில் வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைக் கொள்ளையடத்தநீகிலேஷ் (வயது 25) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை என்.எஸ்.வி. போஸ் சாலையைச் சேர்ந்த தங்க வியாபாரி அசோக். அவரிடம் பணியாற்றும் பாபுலால்,கோவையில் உள்ள வாடிக்கையாளர் ஒருவருக்குக் கொடுப்பதற்காக ரூ.30 லட்சம் மதிப்புள்ள 4.5 கிலோஎடையுள்ள தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டு கோவை எக்ஸ்பிரஸில் புறப்பட்டார்.
சேலம் ரயில் நிலையத்தை ரயில் கடக்கும் போது, பாபுலால் அருகிலிருந்த அடையாளம் தெரியாத இருவர் தங்கக்கட்டிகள் இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்தனர். இதில் ஒருவர் பெட்டியுடன்தப்பிவிட்டார். ஆனால், இன்னொருவரை பாபுலாலும் மற்ற பயணிகளும் பிடித்துவிட்டனர்.
இதையடுத்து ரயில்வே போலீசார், பிடிபட்ட அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர்நீகிலேஷ் என்பதும் தங்கக் கட்டிகள் இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியவர் நைடால் (வயது 29)என்றும் தெரியவந்தது.
இந்த இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. தங்கக் கட்டிகளை பாபுலால் எடுத்துச்செல்வதை அறிந்து சென்னையில் இருந்தே அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர் இந்தக் கொள்ளையர்கள்.












Click it and Unblock the Notifications