ஈசுவரன் தரும் திடுக் தகவல்கள்
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் லேட்டஸ்டாக சரணடைந்த ஈசுவரனிடம் போலீஸார் இரவு பகலாக விசாரணைநடத்தி வருகின்றனர். இவர் முன்பு கைதான எஸ்ஸார் கோபியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை செல்லூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அப்போது அவர் முக்கியதகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது வாக்குமூலம் குறித்து போலீசாரிடம்விசாரித்தபோது கிடைத்த விவரம்:
நான் எனது அண்ணன் எஸ்ஸார் கோபியுடன் மதுரையில் தங்கியுள்ளேன். எனது அண்ணன் எஸ்ஸாரும்,இன்னொரு அண்ணன் நல்லமருதுவும் இணைந்து கேபிள் டி.வி. தொழில் நடத்தி வருகின்றனர். அதனை நான்கவனித்து வருகிறேன். எஸ்ஸார் கோபி தி.மு.க.வில் 59-வது வட்ட செயலாளராக உள்ளார். இதன் காரணமாகஎங்கள் வீட்டிற்கு தி.மு.க.வினர் அடிகடி வருவார்கள்.
மேலும் கேபிள் டி.வி. தொழில் முபாரக் மந்திரியும் கூட்டு சேர்ந்து நடத்தி வருவதால் அவருடன் நேருங்கி பழகும்வாய்ப்பு கிடைத்தது. எஸ்ஸார் கோபி அழகிரியின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.
அதனால் அழகிரி வீட்டிற்கும் அவர் நடத்தும் வீடியோ கடைக்கும் என்னையும் அழைத்து செல்வார். அழகிரிக்குஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் எஸ்ஸார் கோபி என்னிடம் சொல்வார். இந் நிலையில் தான் தி.மு.க.உள்கட்சி தேர்தல் வந்தது. அழகிரி தன்னுடைய ஆதரவாளர்க்கு நிறைய பதவிகளை பெற முயற்சி செய்தார்.இதனால் தா.கிருட்டிணனுக்கும் அழகிரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தா.கிருட்டிணன் கருணாநிதியை சந்தித்து மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் தேர்தல் நடத்தஏற்பாடு செய்தார். அழகிரியின் கோபம் சூடேரியது. தான் கருணாநிதியின் மகனாக இருந்தும் ஏதும் செய்யமுடியவில்லை என்று ஆத்திரப்பட்டார். அழகிரியின் அரசியல் செல்வாக்கிற்கு தடையாக இருந்த தா.கிருட்டிணனின் செல்வாக்கு வளர்ந்தால் ஆபத்து ஏற்படும் என நினைத்தார்.
கடந்த மாதம் 18ம் தேதி மன்னன், கராத்தே சிவா, முபாரக்மந்திரி, எஸ்ஸார் கோபி ஆகியோர் அழகிரியைசந்தித்தனர். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன். அப்போது அழகிரி, தா.கிருட்டிணனை கொலை செய்யவேண்டும். அவன் செத்தால் தான் நிம்மதி என ஆக்ரோஷ்மாக பேசினார்.
இதையடுத்து தா.கிருட்டிணன் கொலை செய்வது பற்றி திட்டம் தீட்டினோம். தா.கிருட்டிணன் காலையில் வாக்கிங்போகும்போது கொன்று விடும்படி மன்னனிடம் கூறினார் அழகிரி. எஸ்ஸார் கோபியையும் துணையாக இருக்ககூறினார். பின்னர் நாங்கள் எல்லோரும் டவுன் ஹால் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து மறுநாள் 20ந்தேதி கொலை செய்ய முடிவு செய்தோம். அதன் படி வீட்டிலிருந்த சூரிக்கத்தி மற்றும் வெட்டு கத்தி ஆகியஆயுதங்களை எடுத்து வந்தோம்.
எஸ்ஸார் கோபி ஆயுதங்களை எடுத்து முபாரக்மந்திரி , இப்ராகிம் சேட் இருவரிடமும் கொடுத்து வேலையைமுடிக்க சொன்னார். அவர்கள் வீடு தெரியாது என்று கூறினர்.
அதற்கு அவர்களை அழைத்துச் சென்று வீட்டை காட்டுமாறு மன்னனிடம் அண்ணன் எஸ்ஸார் கோபி சொன்னார்.வீட்டை காட்டி விட்டு லாட்ஜ் அறைக்கு வந்தார் மன்னன். முபாரக்மந்திரியும், இப்ராஹிம் சேட்டும் திட்டமிட்டபடிஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
அதன் பின்பு காலை 6.10 மணிக்கு வேலையை முடித்துவிட்டேன் என முபாரக்மந்திரி எஸ்ஸார் கோபிக்கு போனில்பேசினார். பிறகு அவர் அழகிரியுடன் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை சொன்னார். அழகிரி உடனேஅறையை காலி செய்து வீட்டிற்கு போக சொன்னார். இப்ராஹிம் சேட் மோட்டார் சைகிளை விட்டு சென்றிருந்தார்.
அதனை வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து விட்டு அழகிரியை சந்திக்க சென்றோம். இதற்கிடையேதா.கிருட்டிணன் கொலைக்கு அழகிரி தான் காரணம் என வெளியில் செய்தி பரவியதால் போலீஸார் மறுநாள் 21ந்தேதி காலை அவரை கைது செய்து திருச்சி கொண்டு சென்றனர்.
அண்ணன் எஸ்ஸார் கோபி என்னை சொந்த ஊருக்கு சென்று வருமாறு பணம் கொடுத்து அனுப்பினார். நானும்சென்றேன். பத்திரிக்கையில் எஸ்ஸார் கோபி, முபாரக்மந்திரி, கராத்தே சிவா, மன்னன் ஆகியோரை கைதுசெய்ததாக படித்தேன். பின்னர் இப்ராஹிம் சேட், சீனி, பாண்டி மற்றும் என்னையும் போலீஸார் தேடுவதாக தகவல்கிடைத்தது.
எனவே உடனடியாக நான் பரமக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தேன். அங்கிருந்து மதுரை மத்திய சிறைக்குகொண்டு வந்தனர்.
இவ்வாறு ஈசுவரன் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications