மாமியாரை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற மருமகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Prabhaதன்னுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்த மாமியாரை, அரிவாள் மனையால் கழுத்தை அறுத்துக் கொன்றார்மருமகள்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் ஏழுமலை, இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரி சத்துணவுக்கூடத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

இவர்களின் மகன் தீனதயாளன், இவரது மனைவி பிரபா (வயது 30). தீனதயாளன் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில்பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் அனைவரும் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். இதில் மாமியார் கஸ்தூரிக்கும் மருமகள் பிரபாவுக்கும்அடிக்கடி சண்டை நேருவது வழக்கம். இருவரும் மிக பயங்கரமாகத் திட்டிக் கொள்வார்களாம்.

இந் நிலையில் நேற்று குளித்துக் கொணடிருந்த கஸ்தூரி தனக்கு முதுகு தேய்த்துவிடுமாறு பிரபாவிடம்கூறியுள்ளார். ஆனால் பிரபா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி, பிரபாவை வாய்க்கு வந்தபடிதிட்டியுள்ளார்.

மாமியார் திட்டியதால் கோபமடைந்த பிரபா சமையல் அறையில் இருந்து அரிவாள் மனையை எடுத்துக் கொண்டுஆவேத்துடன் வந்தார். குளியறையில் குளித்துக் கொண்டிருந்த மாமியாரின் கழுத்தில் பலம் கொண்டு அரிவாள்மனையால் வெட்டினார்.

அலறியபடி கஸ்தூரி சரிய, ஆனாலும் ஆவேசம் குறையாத பிரபா அவரது கழுத்தையும் அறுத்துள்ளார். அப்போதுகஸ்தூரி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடி வந்தனர்.

அப்போது கையில் அரிவாள் மனையுடன் பிரபா நின்றிருக்க, நிர்வாண நிலையில் குளியலறையில் ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்தார் கஸ்தூரி.

இதையடுத்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அதற்குள் அவர்இறந்துவிட்டார்.

இதையடுத்து பிரபாவை போலீசார் கைது செய்தனர். போலீசார் பிரபாவிடம் விசாரித்தபோது மாமியாரை மிகக்கடுமையாகக் குறை கூறியுள்ளார். இரு மாதங்களுக்கு முன் மாமியாரே தனக்கு பாலில் விஷம் கலந்துகொடுத்ததாகவும், இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்ததாகவும் போலீசாரிடம் அவர்கூறியுள்ளார்.

ஆனால், பிரபாவின் கணவர் தீனதயாளனோ தன் மனைவி மன நிலை சரியில்லாதவர் என்று கூறியுள்ளார்.இதற்காக அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+