புகார் வராத நிலையிலும் கந்து வட்டிக் கும்பலை மடக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Pro Noteவெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஏழை மக்களிடம் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து,ஏடாகூடமாய் பணம் வசூலித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

120 சதவீத அளவுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த இவர்கள், அதை வசூலிக்க ஆள் வைத்து அடித்தும்,மிரட்டியும் வந்துள்ளனர்.

புதிதாகக் கொண்டு வரப்பட்ட கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் கைதாகும் இரண்டாவது கும்பல் இது. முதலில்மதுரையைச் சேர்ந்த இரு பெண் ரவுடிகள் இந்தச் சட்டத்தின் கீழ் உள்ளே அனுப்பப்பட்டனர்.

சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்தவர் செல்வராஜ் மற்றும் வின்சென்ட் பால். தண்டையார்பேட்டையைச்சேர்ந்த இவர்கள தங்களுடன் பணியாற்றும் சக துப்புறவுத் தொழிலாளர்களுக்கு வட்டுக்குப் பணம் கொடுத்துவந்தனர்.

இதில் ஏகப்பட்ட பணம் சேரவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் வட்டித் தொழிலேயேஇறங்கினர்.

படிப்பறிவில்லாத, ஏழைத் துப்புறவுத் தொழிலாளர்களில் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சிலஆயிரங்களைத் தந்துள்ளனர். கடன் வாங்கியவர்களிடமிருந்து முன் தேதியிட்ட காசோலைகளை வாங்கி வைத்துக்கொண்டு, சம்பள தினத்தன்று வங்கியில் அந்த காசோலைகளைபோட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்களாம்.

இதனால் கடன் வாங்கிய ஊழியர்கள் சம்பள நாள் அன்றே வீட்டுக்கு வெறும் கையுடன்தான் போவார். மேலும்மாநகராட்சி வாயிலில் வந்து நின்று கொண்டு, வட்டி செலுத்தாதவர்களை அடிப்பது, மிரட்டுவது போன்றசெயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தனி குண்டர் படையையே இருவரும் வைத்துள்ளனர்.

துப்புறவுத் தொழிலாளர்கள் மாத்திரமல்லாமல் பிற மாநகராட்சி ஊழியர்களுக்கும் அநியாய வட்டிக்குப் பணம்தந்துள்ளனர்.

இவ்வாறு மாநகராட்சி ஊழியர்களிடம் மட்டும் இவர்கள் வட்டிக்குத் தந்துள்ள தொகை ரூ. 70 லட்சத்தைத்தாண்டும் என்கிறது போலீஸ் வட்டாரம்.

இவர்களிடம் ரூ. 25,000 வாங்கிய ஒரு துப்புறவுத் தொழிலாளி ரூ. 1.20 லட்சம் வட்டியாகக் கட்டிய பின்னரும்அவரையும் மாதந்தோறும் 1ம் தேதி வாசலில் மடக்கி பணம் பறித்து வந்துள்ளது இக கும்பல்.

வெற்றுத் தாளில் வாங்கிய கையெழுத்தை வைத்து பல துப்புறவுத் தொழிலாளர்களின் குடிசை மாற்று வாரியவீடுகளையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதையும் வாடகைக்கு விட்டு பணம் பார்த்து வந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் முதலாவது மண்டலத்தில் மட்டும் 120 ஊழியர்கள் இவர்களிடம் வட்டிக்குக் கடன்வாங்கி விட்டு வீடு, வாசலை இழந்துள்ளனர்.

இவர்கள் மீது இதுவரை யாருமே போலீசில் புகார் சொன்னதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,மாநகராட்சிப் பகுதியில் கண்காணிப்பில் இருந்த உளவுப் பிரிவு போலீசார் மூலம் இதைத் தெரிந்து கொண்டமாநகர காவல்துறை ஆணையர் விஜய்குமார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சில மாதங்களாகவேகாத்திருந்தார். இவர்களைத் தீவிர போலீஸ் கண்காணிப்பிலும் வைத்திருந்ததாகத் தெரிகிறது.

கந்து வட்டிக்காரர்களைப் பிடிக்க புதிய சட்டம் வந்ததைத் தொடர்ந்து, அதை வைத்து இவர்களை அமுக்கஉத்தரவிட்டார். இதையடுத்து யாரிடமிருந்தும் புகார் வராத நிலையிலும் காசி மேடு போலீசார் மூலம் இவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள செல்வராஜுக்கு காசிமேடு பகுதியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர பங்களாஉள்ளது. இதுதவிர கடன் வாங்கியவர்களிடமிருந்து அடித்துப் பிடுங்கியதில் ரூ. 75 லட்சம் அளவுக்கு வங்கியில்பணம் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை ஜார்ஜ்டவுன் 15-வது பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

-->
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+