தர்ம்புரி அருகே அசுத்த நீரால் காலரா: 5 பேர் பலி: 700 பேர்மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி அருகே அசுத்த நீர் குடித்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கிராம மக்களில் 5 பேர்சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள்அனைவரும் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

தென்பென்னையாற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையம் தூய்மையாகப்பராமரிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையத்தில் இருந்து 33 கிராமங்களுக்கு தண்ணீர்வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நீரைப் பருகிய இந்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 700 பேருக்கு வாந்தியும் பேதியும்ஏற்பட்டது. தகவல் அறிந்த தர்மபுரி மாவட்டக் கலெக்டர் சித்திக் அதிகாரிகளுடன் அங்குவிரைந்தார். மருத்துவக் குழுக்களும் விரைந்தன. அங்கேயே மருத்துவ முகாம்களும்அமைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட 700 பேர்அனைவரும் தர்மபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இவர்களில் ஒரு சிறுவன் உள்பட 5 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.இதனால் இந்த கிராமங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களும்அவர்களது உறவினர்களும் கலங்கிப் போயுள்ளனர்.

கடுமையான வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் பலரும் அரை மயக்கத்தில் உள்ளனர்.இவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+