இலங்கையில் மேலும் ஒரு தமிழர் கட்சி பிரமுகர் கொலை
கொழும்பு:
இலங்கையின் மட்டக்களப்பு நகரில் இன்னொரு தமிழர் கட்சிப் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு தான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (வரதராஜ பெருமாள் பிரிவு) கட்சியைச்சேர்ந்த சுபத்ரன் யாழ்பாணத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந் நிலையில் நேற்றிரவு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு பகுதியின் தலைவர் பொன்னையாராமச்சந்திரன் (வயது 42) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சாலையில் வைத்து இவரை இருவர் சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே இலங்கையில் மீண்டும் போர் வெடிக்காமல் தவிர்க்க, புலிகளுக்கு மேலும் பல சலுகைகளைவழங்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ஜி.எல்.பெரிஸ் நிருபர்களிடம்பேசுகையில், வட கிழக்குப் பகுதியில் இடைக்கால நிர்வாகத்தின் அமைப்பு குறித்த வரைவுத் திட்டம் விரைவில்புலிகளிடம் ஒப்படைக்கப்படும். இத் திட்டத்தில் புலிகள் சொல்லும் மாற்றங்களும் ஏற்கப்படும்.
இதன் பின்னரே இந்தத் திட்டத்தின் உள்ளீடுகள் குறித்து வெளியில் விவரம் தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications