ராஜினாமா செய்துவிட்டு சோ.பா. பல்டி: டெல்லியில் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை சோ.பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்துவிட்டதாகத் தெரிகிறது. இதை அவர்மறுத்தாலும் தனது ராஜினாமாவை அவர் பேக்ஸ் செய்துள்ளது உண்மை என காங்கிரஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

இந் நிலையில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் இன்று அவசரமாக டெல்லி கிளம்பிச் சென்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் இடையே கருத்து வேறுபாடுநிலவுவதாலும், இதனால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாலும் விரைவில் மாநில காங்கிரஸ்தலைமையில் மாற்றம் வரலாம் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கமல்நாத் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் நேற்றிரவு சோ.பாலகிருஷ்ணன்தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்திகள் பரவின. கமல்நாத்தின் கூற்றினால் அதிருப்தியடைந்தசோ.பா. உடனடியாக தனது ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு பேக்ஸ் செய்தார்.

ஆனால், தங்களிடம் ஆலோசிக்காமல் கமல்நாத் ஒருதலையாக சோ.பாவைக் குறி வைத்துப் பேசி வருவதாகவும்சோ.பா. ராஜினாமாவுக்கு கமல்நாத் தான் ராணம் என ஜி.கே. வாசன் சோனியாவிடம் புகார் கூறினார். இதையடுத்துகமல்நாத்தை சோனியா கண்டிக்க அவர் உடனே தமிழக கட்சித் தலைமையில் மாற்றம் ஏதும் இருக்காது என்றுநேற்றிரவு அறிவித்தார்.

இதையடுத்து சோ.பாவும் தனது ராஜினாமா முடிவில் இருந்து பல்டி அடித்ததோடு, நான் ராஜினாமா கடிதமேஅனுப்பவில்லை என்று கதை விட்டு வருகிறார்.

பரமக்குடியில் அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியைச் சீரமைப்பது குறித்து கமல்நாத் கருத்துக்கேட்டிருந்தார். அது தொடர்பாகவே நான் கட்சி மேலிடத்திற்கு பேக்ஸ் அனுப்பியிருந்தேன். கட்சிக்குள் நிலவும்பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறும் அந்த பேக்ஸ் கடிதத்தில் கூறியிருந்தேன். ராஜினாமா ஏதும்செய்யவில்லை என்றார் அவர்.

ராஜினாமா உண்மை:

இருப்பினும், சோ.பா. ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளது உண்மைதான் என்று அவருக்கு நிெருக்கமானவட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. தனது தலைமை குறித்து விமர்சிக்கும் அளவுக்குசென்று விட்டபின்னரும் பதவியில் நீடிக்க அவரது மனம் இடம் கொடுக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இளங்கோவன் டெல்லி பயணம்:

இந் நிலையில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் இன்று டெல்லி சென்றார். சோ.பா. ராஜினாமாகுழப்பம் எழுந்துள்ள நிலையில் இளங்கோவன் டெல்லி சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கட்சி நிர்வாகிகள் மாற்றம் மற்றும் காமராஜர் பிறந்த நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாகவும் கட்சி மேலிடத்திடம்விவாதிக்க டெல்லி போவதாக அவர் தரப்பில் கூறப்பட்டாலும், சோ.பா. விவகாரம் தொடர்பாகவே அவர் டெல்லிசென்றதாகத் தெரிகிறது.

சோ.பாவை நீக்க வாசன் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் இப்போதைக்கு கட்சித் தலைமையில் மாற்றம்ஏதும் செய்யப் போவதில்லை என கமல்நாத் இளங்கோவனிடம் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும்டெல்லிக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து டெல்லி புறப்பட்ட இளங்கோவன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிகையில், இப்போதைக்குதமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் ஏதும் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரைநானும், சோ.பாவும் அவரவர் பதவியில் நீடிப்போம். தலைவர் பதவியை அவர் ராஜினாமாசெய்யவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+