கலாம் நாளை சென்னை வருகிறார்
சென்னை:
இந் நிலையில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நாளை சென்னை வருகிறார்.
இந்திய விமானப் படையின் தனி விமானம் மூலம் நாளை இரவு 10.30 மணிக்கு சென்னை வரும் அப்துல்கலாம், இரவுராஜ்பவனில் தங்குகிறார். வியாழக்கிழமை காலை மயிலாப்பூல் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்திற்குச் செல்கிறார்.அங்கு காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தின் 151-வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் வடபழனியில்உள்ள விஜயா மருத்துவமனைக்குச் செல்லும் கலாம், அங்கு அமைக்கப்பட்டுள்ள பாட்டர்சன் புற்றுநோய் மையத்தை திறந்துவைக்கிறார்.
பிற்பகல் 12.15 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகம் செல்கிறார் கலாம். அங்கு, கலாம் எழுதிய அக்னி சிறகுகள்நூலின் 1 லட்சமாவது பிரதி வெளியிடப்படுகிறது. பிரதியைப் பெற்றுக் கொண்டு மாணவர்கள் மத்தியில்உரையாடுகிறார். பின்னர் விஞ்ஞான மாணவர்களுடன் தனியாக ஆலோசனை நடத்துகிறார்.
பிற்பகல் 2.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லும் கலாம்,அங்குள்ள சிவானந்தா ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்று குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார். (இந்தஆதரவற்ற குழந்தைகள் சுமார் 100 பேரை சமீபத்தில் ரயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் உதவியுடன்டெல்லிக்கு வரவழைத்து ஜனாதிபதி மாளிகையை சுற்றிக் காட்டினார் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்குழந்தைகளின் போக்குவரத்து செலவை ரயில்வே ஏற்றுக் கொண்டது.)
இந் நிகழ்ச்சிக்குப் பிறகு, அங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் கலாம், ஏனாத்தூரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதிபல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மேற் படிப்புகளை தொடங்கி வைக்கிறார்.
காஞ்சிபுரம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிறகு மாலை 6.25 மணியளவில் சென்னை திரும்பும் கலாம் இரவு7.10 மணிக்கு டெல்லி திரும்புவார்.
கலாம் வருகையின்போது சென்னையில் குண்டு வைக்க தமிழர் விடுதலை இயக்கம் திட்டமிட்டிருந்த சதி நேற்றுகண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications