தமிழக அரசுக்கு பின்னடைவு: கோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை
டெல்லி:
பொடா வழக்கில் கைதாகியுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாதுஎன்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கூறி கோபால் மீதுபொடா வழக்குப் போட்டுள்ளது தமிழக அரசு. இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
முதலில் இவர் மீது கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்த அரசு பின்னர் அதை பொடா வழக்குகளாக மாற்றியது.இதனால் தன் மீது தொடரப்பட்டுள்ள 7 கிரிமினல் வழக்குகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று கோரி நக்கீரன் கோபால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் பொடா சட்டத்தில் உள்ள சில அம்சங்களை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தவழக்கில் நீதிமன்றம் தனது தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.
இந் நிலையில் சி.பி.ஐ. விசாரணை கோரி கோபால் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சி.லகோதி,பிரிஜேஷ்குமார் ஆகியோர் அடங்கிய கோடைகால பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நக்கீரன்கோபால் மீது போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு நீதிபதிகள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் பேசுகையில், கோபால் வழக்கில் போலீஸ்விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதது. எனவே விரைவில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யத்திட்டமிட்டுள்ளோம் என்றார்.
நக்கீரன் கோபால் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் டி.ஆர். அந்தியர் ஜினா பேசுகையில்,
முதலில் காணாமல் போன ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தப்பட்டது.பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பொடா வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். பொடாசட்டத்தின் சில பிரிவுகளின் செல்லும்தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் கோபால் தாக்கல் செய்துள்ள வழக்கில்இன்னும் தீர்ப்பு வரவில்லை. அந்தத் தீர்ப்பு வரும் வரை கோபால் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதைநிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பொடா சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிராகஇருப்பதாக கூறி கோபால் தொடர்ந்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை நக்கீரன் கோபால் மீதுகுற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதை தமிழக அரசின் வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்தார். போலீஸ் விசாரணை முடிந்துவிட்டதால் கோபால் மீதுகுற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார். ஆனால், நீதிபதிகள் இந்தக் கோரிக்கையைநிராகரித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications