ராணிமேரிக் கல்லூரியை இடிக்க தடை நீடிப்பு
சென்னை:
ராணிமேரி கல்லூரியை இடிக்க விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதின்றம் நீட்டித்துஉத்தரவிட்டுள்ளது.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரி இடித்துவிட்டு புதிய தலைமை செயலகம்கட்டும் முயற்சிகளில் முதல்வர் ஜெயலலிதா இறங்கினாக்.
இதையடுத்து கடற்கரை பகுதியில் இருக்கும் புராதன கட்டிடங்களை இடிக்கவும், ரூ.5 கோடிமதிப்பில் புதிய கட்டிடம் கட்டவும் மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று மத்தியசுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு உத்தரவிட்டார்.
இதனால் ராணிமேரி கல்லூரியை இடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பாலுவின் உத்தரவை எதிர்த்துசென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதாசிவம், பாலுவின் உத்தரவுக்கு தடை விதித்தார்.
இதை எதிர்த்து பாலு வழக்குத் தொடர்ந்தார். அதில், இந்த வழக்கை நீதிமன்றத்தின் சுற்றுச்சூழல்பிரிவு டிவிஷன் பெஞ்ச் தான் விசாரிக்க வேண்டும், தனி நீதிபதி இதில் உத்தரவு எதையும் பிறப்பிக்கமுடியாது. எனவே நீதிபதி சதாசிவத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பாலுகோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியம், நீதிபதி இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் அடங்கியகோடைகால விடுமுறைகால டிவிஷன் பெஞ்ச், பாலுவின் உத்தரவுக்கு நீதிபதி சதாசிவம் விதித்ததடையை நீக்கினர். இதனால் ராணி மேரிக் கல்லூரியை இடிக்க தடை ஏற்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜ்அடங்கிய பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை பாலுவின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையைநீக்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதனால் வழக்கு விசாரணை முடியும் வரை கல்லூரி இடிக்க முடியாது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications