இவர்கள் ஆசிரியர்கள் தானா?
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி என்ற ஊரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த சில ஆசியர்கள் பள்ளிக் கூட ஆய்வகத்திலேயே மது அருந்தி, மாமிசம் சமைத்துசாப்பிடுவதோடு மாணவிகளிடமும் தவறாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களும், பொது மக்களும் மாவட்டக் கல்வி அதிகாரியைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பொன்பரப்பியில் மேல் நிலைப் பள்ளியின் சில ஆசிரியர்கள் மீது மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறுபுகார்களைக் கூறுகிறார்கள்.
பள்ளிக்கூட ஆய்வகத்திலேயே மது அருந்துவதாகவும், மாமிசம் சமைத்து சாப்பிடுவதாகவும், பிராக்டிகல் மார்க்வேண்டும் என்றால் தங்களது விருப்பத்திற்கு இணங்குமாறு மாணவிகளை மிரட்டுவதாகவும் அவர்கள் புகார்கூறுகிறார்கள்.
இந்தப் புகார்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கும் அவர்கள் அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி ஆரோக்கியம் பொன்பரப்பிக்கு வருகை தந்தார். அப்போது அவரைமுற்றுகையிட்ட பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,குறைந்தபட்சம் உடனடியாக இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ஆரோக்கியம் உறுதியளித்த பின்னரே முற்றுகைப் போராட்டம்கைவிடப்பட்டது. பின்னர் பள்ளிக்குள் சென்று அவர் விசாரணை நடத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications