அட்வகேட் ஜெனரலை அவமானப்படுத்திய அதிமுக வழக்கறிஞர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரனை அதிமுக வழக்கறிஞர்கள்சூழ்ந்து கொண்டு கெரோ செய்து, ஆபாச வார்த்தைகளால் திட்டினர். மேலும் சந்திரனுடன் இருந்த சிலவழக்கறிஞர்களைத் தாக்கினர். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அட்வகேட் ஜெனரலின் அறையில் இச் சம்பவம்நடந்தது.

அரசு வக்கீல் பதவி கிடைக்காத அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டனர்.

அரசு வக்கீலாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவர், கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தனது பதவி பறிபோனதற்கு அரசின் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன்தான் காரணம் என்று கருதியவிஜயக்குமார் தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட பதவியை மீண்டும் பெற்றுத் தருமாறு சந்திரனிடம் கோரி வந்தார்.இது தொடர்பாக அடிக்கடி அதிமுக வழக்கறிஞர்களுடன் அவரது அறைக்கு வந்த விஜய்குமார் மிரட்டி விட்டுப்போயுள்ளார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் விஜய்குமாரும் அதிமுக வக்கீல்கள் சிலரும் என்.ஆர்.சந்திரனின் அறைக்குமீண்டும் வந்துள்ளனர். அங்கு அவரிடம் வந்து வாக்குவாதத்தில் இறங்கினர்.

அறைக்குள் நுழைந்த அதிமுக வக்கீல்கள், அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து விஜய்குமாரை ஏன் நீக்கினீர்கள்,அவகுக்கு ஏன் மீண்டும் பதவி தர பரிந்துரை செய்ய மறுக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அப்போது, முக்கியமான வழக்கு தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் சந்திரன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். நான் முக்கிய ஆலோசனையில் இருக்கிறேன். உங்களிடம் அப்புறம் பேசுகிறேன் என்று தலைமைவழக்கறிஞர் கூற, இதைவிட என்ன பெரிய ஆலோசனை நடத்துகிறீர்கள் என்று அவரை ஒருமையில் அழைத்து.மிகவும் கீழ்த் தரமாகவும் ஆபாசமாகவும் திட்டினர்.

அரசு அதிகாரிகள் முன் தன்னை அதிமுக வழக்கறிஞர்கள் மகா மட்டமாகப் பேசியதால் கூனிக் குறுகிய சந்திரன்,அவர்களை உடனே அறையிலிருந்து வெளியேறுமாறு கூறினார்.

ஆனால் அவர்கள் வெளியேறவில்லை. சில வக்கீல்கள் என்.ஆர்.சந்திரனை தாக்கவும் முயன்றனர். அப்போதுஅங்கிருந்த சந்திரனின் ஜூனியர் வக்கீல்கள், புகுந்து அவரைக் காப்பாற்ற முயல அவர்களை அதிமுகவழக்கறிஞர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திரும்பிச் சென்றனர் அதிமுக வழக்கறிஞர்கள். இந் நிலையில் நேற்று மீண்டும் சந்திரனின் அறைக்குவந்த அவர்கள், இந்த அட்வகேட் ஜெனரல் பதவி உனக்கு எங்க அம்மா (ஜெயலலிதா) போட்ட பிச்சை, அதைஉடனே ராஜினாமா செய் என்று கோரி மிக ஆபாசமாகப் பேசியுள்ளனர்.

அப்போது மாநகராட்சி வழக்குத் தொடர்பாக மாநகராட்சி கமிஷ்னருடன் என்.ஆர். சந்திரன் ஆலோசனைநடத்திக் கொண்டிருந்தார்.

வாக்குவாதம் முற்றி சந்திரனை மீண்டும் விஜய்குமாரும் அதிமுக வழக்கறிஞர்கள் தாக்க முயல, மீண்டும் அவரதுஜூனியர்கள் தலையிட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள்சங்கத் தலைவர் பிரபாகரன் விரைந்து வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து விஜயக்குமார் உள்ளிட்ட அதிமுக வக்கீல்களை அங்கிருந்து வெளியேற்றினார்.

இந்த விவகாரம் குறித்து பார் கவுன்சில் கூடி விவாதிக்கும் என்று தெரிகிறது.

நான் இங்கு 30 வருடமாக வக்கீலாக இருக்கிறேன். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான ஒரு அட்வகேட்ஜெனரல் இதுபோல அவமானப்படுத்தப்பட்டதை என் சர்வீசில் இதுவரை பார்த்தில்லை என்று இச் சம்பவம் குறித்துஒரு சீனியர் வழக்கறிஞர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+