ஜெவை சந்தித்தார் கமல்: சண்டியர் பெயர் மாற்றம்
சென்னை:
சர்ச்சைக்குள்ளாகிவிட்ட சண்டியர் படத்தின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன்தெரிவித்துள்ளார்.
| சண்டியர் என்ற பெயரில் கமல்ஹாசன் புதிய படத்தைத் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். |
|
படப் பிடிப்புக்கு பாதுகாப்புத் தருவதாகக் கூறிய காவல்துறை கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டது. இந்தப்படப்பிடிப்புக்கு பாதுகாப்புத் தரப்படாது என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் இன்று ஜெயலலிதாவைச் சந்திக்க கமல்ஹாசனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதையடுத்து இன்று கோட்டைக்கு வந்த கமல்ஹாசன் அங்கு முதல்வரை சந்தித்துப் பேசினார். சுமார் 35 நிமிடங்கள்இச் சந்திப்பு நடந்தது.
அப்போது, சண்டியர் படத்தின் கதை இரு சமூகத்தினருக்கிடையிலான கதை அல்ல என்றும் படத்தின் போக்குகுறித்தும் விவத்தார்.
இதைத் தொடர்ந்து வெளியே வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சண்டியர் பட பாதுகாப்பு தொடர்பாக முதல்வரிடம் விவாதித்தேன். அவரது நிலையை முதல்வர் எடுத்துரைத்தார்.
படத்தின் பெயர் பிரச்சினைக்குரியதாக கூறப்படுவதால் பெயரை மாற்ற உத்தேசித்துள்ளேன். இதை முதல்வர்மகிழ்ச்சியுடன் வரவேற்றார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். இந்தப் படம் யாருடைய மனதையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்படவில்லை.
படப் பிடிப்பை ஆந்திராவுக்கும் மாற்ற மாட்டேன். தமிழ் நாட்டில் தான் எடுப்பேன். எந்தப் பெயரில் படத்தைஎடுத்தாலும் இந்தப் படம் பெரும் வெற்றி பெறும் என்பது மட்டும் உறுதி. சகலகலா வல்லவன்- பாகம் இரண்டுஎன்று பெயர் வைத்தாலும் கூட இந்தப் படம் ஓடும்.
இப்போது பெயரை மாற்றிவிட முடிவு செய்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பும் தேவைப்படாது என்றே கருதுகிறேன்.முதல்வருடன் பேசிய முழு விவரத்தையும் சொல்ல முடியாது. ஒரு குறை இருந்தது. அவரைச் சந்தித்தால் அதுஇப்போது நீங்கிவிட்டது. இனி எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றார் கமல்ஹாசன்.
கதையை மாற்றுவீர்களா என்ற கேள்விக்கு, கதையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பதிலளித்தார்கமல்ஹாசன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications