மார்க்சிஸ்ட் Vs
சென்னை:
கமல்ஹாசனின் சண்டியர் படப் பிடிப்புக்கு பாதுகாப்பு தர வேண்டியது, தமிழக அரசின் கடமை என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதையடுத்து கம்யூனிஸ்டுகளுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் வருவதற்கு முன்பே அந்தப் படத்தை தடுப்பேன், எதிர்ப்பேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி கூறவது தவறு. கலைஞர்களின் உணர்வுகளைத் தடுக்கும் முயற்சி இது. ஒரு படத்தை அதுவெளியான பின் பார்த்து விமர்சிப்பதே ஜனநாயகமாகும்.
தமிழகத்திலோ அல்லது தேசிய அளவிலோ மூன்றாவது அணி அமையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால்பா.ஜ.க.வுக்கு எதிராக நிச்சயம் ஒரு மாற்று அணி தேசிய அளவில் உருவாக்கப்படும். மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த கூட்டணி அமைக்கப்படும்.
அதே போல சில மாநிலங்களிலும் மூன்றாவது அணி அமையலாம். ஆனால் தமிழகத்தில்3-வது அணிக்கு வாய்ப்புஇல்லை என்றே கருதுகிறேன். இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தி வரும் ஜெயலலிதா, மூன்றாவது அ ணிஅமைக்கப் போவதாகக் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.
ஜெயலலிதா இப்போதே பா.ஜ.க. அணியில் தான் மறைமுக இடம் பெற்றிருக்கிறார். மூன்றாவது அணிஅமைப்பதன் மூலம் இன்னொரு இந்துத்துவா அணியை இவர் உருவாக்கப் போகிறாரா? என்றார் வரதராஜன்.
கிருஷ்ணசாமி எதிர்ப்பு:
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்து டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன் விவரம்:
ஆசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் உருக்குலைப்பு சக்திகள் என்பது சமூக அறிஞர்களின் கருத்து. அதிலும், இந்தியகம்யூனிஸ்ட்கள் கம்யூனலிஸ்டுகள் (சமய, ஜாதிப் பற்றாளர்கள்).
கலை என்பது சமூக மாற்றத்துக்கு உதவ வேண்டும். கொலைச் சமுதாயத்தை ஏற்படுத்தக் கூடாது. சாதி வெறி என்பதுகொலை வெறிக்கு இட்டுச் செல்லும் என்றார் அறிஞர் அண்ணா. சாதி ஒற்றுமை சொன்ன பாரதிக் கண்ணம்மாஓடாமல் தடுக்கப்பட்டதே. அப்போது இந்த கம்யூனிஸ்ட்கள் எங்கே போனீர்கள்?.
மதுரை பாப்பாபட்டியில் சாதியக் கும்பல் ஒன்று என் காரை உடைத்தார்களே. அப்போது நீங்கள் எங்கேபோனீர்கள்?
பல கோடியில் படம் தயாரிக்கப்பட்ட பின் அதைத் தடுப்பது தயாரிப்பாளர்களுக்கு பேரிழப்பை உருவாக்கும்.இதனால் தான் தயாரிப்பின்போதே தடுத்திட முயல்கிறோம்.
தேவர் மகன் படத்தினால் ஏற்பட்ட சாதிக் கலவரம் சண்டியர் படத்தாலும் தொடர வேண்டுமா?. கம்யூனிஸ்ட்கள்சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications