நியூயார்க் பாலத்தை தகர்க்க சதி: காஷ்மீர் வாலிபர் கைது
வாஷிங்டன்:
அல்-கொய்தாவின் உத்தரவுப்படி நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தைத் தகர்க்க சதி செய்ததாக காஷ்மீரைச்சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வரும் லிமான் பரிஸ் (வயது 34) என்ற அந்த நபர் பின் லேடனைநேரில் சந்தித்துள்ளதாகவும் தெரிகிறது.
அமெரிக்காவில் டிரக் டிரைவராகப் பணியாற்றும் இவர் பாலத்தைத் தகர்ப்பது தவிர விமானத்தில் குண்டுவைக்கவும், ரயில்களைக் கவிழ்க்கவும் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
இவரை சி.ஐ.ஏ, எப்.பி.ஐ, பென்டகன் ஆகியவை பல மாதங்களாகத் தொடர்ந்து உளவு பார்த்துக் கைதுசெய்துள்ளன. கொலம்பஸ் ஓகியோவில் வசித்து வரும் இவரது இன்னொரு பெயர் முகம்மத் ரெளப்.
கைதாகியுள்ள ரெளப் நீதிமன்றத்தில் கொடுக்க வாக்குமூலத்தில், 2000ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பின்லேடனை நேரில் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போது அல்-கொய்தா தீவிரவாதிகளுக்குத் தேவையானபடுக்கைகள், செல்போன்களை தானே வாங்கிச் சென்று கொடுத்தாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுவிட்டதால் தன்னை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்று நினைத்த அவர்,பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்துள்ளதும், அல்-கொய்தா ஆட்களுடன் இ-மெயிலில்தொடர்ந்து தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இவரது இ-மெயில்கள் தான் இவரை சி.ஐ.ஏ.வுக்குக் காட்டிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
புரூக்ளின் பாலத்தின் கம்பிகளை உருகுலைக்க கேஸ் கட்டர்களை வாங்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருந்தார்.கேஸ் கட்டர்களை இ-மெயிலில் கேஸ் ஸ்டேசன் என்ற சங்கேத வார்த்தையில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரயில்களைக் கவிழ்க்க தண்டவாளங்களை சீர்குலைக்கவும் சில கருவிகள் வாங்க இவருக்கு அல்-கொய்தாஉத்தரவிட்டிருந்தது. இந்தக் கருவிகளை மெக்கனிகல் டூல்ஸ் என்று இ-மெயில்களில் குறிப்பிட்டுள்ளார்.
2000, 2001, 2002ம் ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பலமுறை அல்-கொய்தாவினரை இவர்சந்தித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications