இவர் தாங்க நெசமான மாப்பிள்ளை
தூத்துக்குடி:
வரதட்சணை கொடுக்காத மணப்பெண்களை சீரழிக்கும் மாப்பிள்ளைகளுக்கு மத்தியில், வித்தியாசமானமாப்பிள்ளை என்று பெயர் எடுத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி.
மந்திரமூர்த்திக்கும் ரோஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த 19ம் தேதி திருமணம் நடப்பதாகதிட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே ரோஷினியின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், திருமணத்திற்கு வாங்கிவைக்கப்பட்டிருந்த சீர்வசைப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன.
இதை அபசகுனமாக நினைத்த மணமகள் வீட்டார், திருமணம் நின்று விடுமோ என்று பயந்தனர்.
இதை அறிந்த மந்திரமூர்த்தி அவர்களிடம் சென்று, எனக்கு மூட நம்பிக்கைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லை.எனவே திட்டமிட்டபடி கல்யாணம் நடக்கும் என்றார்.
ஆனால், கொடுப்பதற்கு எந்தச் சீர்ரிசையும் இல்லையே, எல்லாம் எரிந்து போய்விட்டதே என்று பெண் வீட்டார்தயங்கியபோது, ஒரு வரிசையும் தேவையில்லை, கல்யாண செலவுகளை நானே ஏற்றுக்கொள்கிறேன்.பெண்ணுடன் வந்தால் மட்டும் போதும் என்று கூறி விட்டார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடந்தது. சொல்லியபடியே பெண் வீட்டாருக்கு ஒரு செலவும்வைக்காமல் மாப்பிள்ளை வீட்டாரே அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டு ஜாம் ஜாம் என்று திருமணத்தைநடத்தினர்.
மணமகள் வீட்டாரை படாத படுத்தும் இந்தக் காலத்தில், வித்தியாசமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டதற்காகமந்திரமூர்த்தியை வாழ்த்தாத வாய்களே அந்த ஊரில் இல்லை.
ஆனால், இதை விளம்பரத்திற்காக தான் செய்யவில்லை, தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மூட நம்பிக்கைக்கும்,வரதட்சணை என்ற பேய்க்கும் பலியாவதை விரும்பாத காரணத்தால்தான் இதைச் செய்ன்ே என்கிறார் மந்திரமூர்த்திநிதானமான குரலில்.
வாழ்க மந்திர மூர்த்தி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications