கோட்டையில் தற்கொலையைத் தடுத்த போலீஸ்
சென்னை:
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற 3 குழந்தைகளின் தந்தையை,போலீஸார் தடுத்துக் காப்பாற்றினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.வறுமையில் வாடி வரும் கண்ணன், முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்டு மனு கொடுத்துள்ளார்.
ஆனால், இதுவரை அவருக்கு எந்த உதவியுடம் கிடைக்கவில்லை. இதையடுத்து கோட்டையிலேயே மகள்களுடன்தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனும், 3 மகள்களுடன் மீண்டும் சென்னைக்கு வந்தார் கண்ணன்.
கோட்டையில் முதல்வர் அலுவலகத்தின் வெளியே காத்திருந்தார். ஜெயலலிதா வெளியே வரும்போது விஷம்குடிக்கத் தயாராக இருந்தார்.
அப்போது பார்வையாளர்களின் பைகளை சோதனையிட்ட போலீசார் இவரது பையில் விஷ பாட்டில் இருந்ததைக்கண்டுபிடித்து அதைப் பறிமுதல் செய்தனர். பின்னர் கண்ணனை, கோட்டைக்குள் இருக்கும் மன நல ஆலோசனைமையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கோட்டையில் நடக்க இருந்த தற்கொலையைத் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்கள் பாஸ்கரன்மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீஸ் உயர் அதிகாகள் பாராட்டி தலா ரூ. 250 பரிசும் வழங்கினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications