பூசாரியை அடித்துக் கொன்ற சிறுவர்கள்
நாகப்பட்டிணம்:
கோவில் முன், கிட்டி விளையாடுவதை தடுத்த பூசாரியை 14 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் சேர்ந்துஅடித்துக் கொன்றுள்ளனர்.
நாகப்பட்டனம் மாவட்டம் குரவலூர் கிராமத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. இந்த ஊரில் உள்ளஅம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தவர் குஞ்சிதபாதம். இவர் ஜூன் 1ம் தேதி கோவில் அருகே கொலையுண்டுகிடந்தார்.
மண்டையில் கம்பால் அடிக்கப்பட்ட ரத்தக் காயமும், கழுத்து நெரிக்கப்பட்ட தழும்பும் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து கொலையாளிகளை போலீஸார் தேடி வந்தனர். கோவிலில் கொள்ளையடிக்க வந்தவர்கள் தான்அவரைக் கொன்றிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது.
ஆனால், கோவில் பெரிய அளவில் பணமோ, நகையோ இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து தனிப்பட்டவிரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாமா என்று விசாரணை நடந்தது.
பூசாரியின் கழுத்தில் நெறிக்கப்பட்ட தழும்பை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள், நைலான் கயிற்றுத் தடத்துடன்,சிறுவர்களின் கைத்தடமும் இருப்பதை போலீசாருக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த ஊர் சிறுவர்கள் குறித்து விசாரணை நடந்தது. அப்போது தான் மணிகண்டன், சங்கர் ஆகியஇரு சிறுவர்கள் மீது சந்தேகம் வந்தது.
அவர்களை போலீசார் விசாரித்தபோது கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இருவரும் கோவில் முன் உள்ள காலி நிலத்தில் கிட்டி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அதை பூசாரிதடுத்தாகவும், இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கிட்டிக் கம்பால் பூசாரியை சரமாரியாக அடித்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.
இதில் மண்டை உடைந்து கீழே விழுந்த பூசாரியை அங்கே கீழே கிடந்த நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிக்கொன்றதாகவும் தெரிவித்தனர்.
இரு சிறுவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications