கன மழை: அணை உடைவதை தடுக்க தமிழகத்துக்கு தண்ணீர் விட்ட கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. கபினி அணையில் நீர் மட்டம் அதன்அதிகபட்சத்தை எட்டிவிட்டது. இதற்கு மேல் நீரைத் தேக்கினால் அணை உடையும் என்பதால் அதைத்திறந்துவிட்டுள்ளது. இதனால் அந்த நீர் மேட்டூரை நோக்கிப் பாய்ந்தோடி வந்து கொண்டுள்ளது.

இந்த நீர் இன்னும் 3 நாட்களில் மேட்டூருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தின் வட பகுதிகளிலும், மத்தியப் பகுதிகளிலும் கடந்த ஒரு வாரகாலமாக கன மழை பெய்து வருகிறது.உடுப்பி, கார்வார், குடகு, மைசூரின் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் நீர்மட்டம் மிக வேகமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக கபினி அணையில் நீர் மட்டும் அதிக பட்ச அளவைத் தொட்டுவிடும் நிலையை எட்டியுள்ளது. இதற்குமேல் அதில் நீரைத் தேக்குவது சாத்தியமில்லை என்பதால் அந்த அணையை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மேட்டூர் அணையின் பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில்,கபினிஅணைக்கு வினாடிக்கு12,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணை வேகமாக நிரம்பிவருகிறது.

இந்த நிலையில் வெள்ளப் பெருக்கால் அணை உடைந்து விடாமல் தடுப்பதற்காக அணையைத் திறந்து விட்டுள்ளதுகர்நாடகம். இந்த நீர் 3 நாட்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணசாகர் அணைக்கும் விநாடிக்கு 2,700 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இருப்பினும் அந்த அணைதிறக்கப்படவில்லை. கபினி அணை விரைவில் நிரம்பி விடும் என்று தெகிறது. அதிலும் அதிகபட்ச மட்டத்தை நீர்எட்டிய பின்னரே கர்நாடகம் திறக்கும்.

அப்படி நடந்தால் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேட்டூரில் தற்போது 25 அடி நீரேஇருப்பு உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும் என்றார் அவர்.

வெள்ளம், மழை போன்ற சமயங்களில் தங்களது அணை உடைந்து விடாமல் தடுப்பதற்காக மட்டும் தமிழகத்திற்கு,கேட்காமலேயே தண்ணீர் திறந்து விடுவது கர்நாடகத்தின் வழக்கமாகி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+