காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டிகள் அடிதடி: போலீஸ் குவிப்பு
சென்னை:
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஜி.கே.வாசன் கோஷ்டிக்கும் இளங்கோவன் கோஷ்டியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு எந்த நேரமும் அடிதடி நடக்கலாம் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோனியாவை அவமதித்த வாசன் கட்சியை விட்டு விலக வேண்டும், இப்படிக்கு காமராஜரின் உண்மைத்தொண்டர்கள் என்று சென்னை நகரில் திடீர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந் நிலையில் கட்சிஅலுவலத்துக்குள்ளேயே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதையடுத்து வாசனின் ஆதரவாளர்கள் மத்தியில் டென்சன் பரவியது. அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சக்திவடிவேலு தலைமையில், அங்குள்ள இளங்கோவனின் அறையைமுற்றுகையிட்டனர்.
இளங்கோவனுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையறிந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர்.அவர்களுக்கும் வாசன் கோஷ்டினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர்அடித்துக் கொள்ளும் சூழல் உருவானது.
இச் சம்பவத்தால் சத்தியமூர்த்தி பவனில் பெரும் பதற்றம் நிலவுகிறது. எந்த நேரத்திலும் இரு தரப்பினரும் அடித்துக்கொள்ளும் சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications