சிறையில் ஓராண்டை தொடப் போகும் வைகோ
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு வரும் ஜூலை 11ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.இதையடுத்து ஜூலை 11ம் திேதயை தியாகிகள் தினமாக அனுஷ்டிக்க மதிமுக முடிவு செய்துள்ளது.
இந்த வழக்குப் பதிவானபோது வைகோ அமெரிக்காவில் இருந்தார். இதையடுத்து தனது அமெரிக்கப் பயணத்தைபாதியிலேயே முடித்துக் கொண்டு கடந்த ஆண்டு ஜுலை மாதம் 10ம் தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியாதிரும்பினார்.
11ம் தேதி சென்னை விமான நிலையத்திலேயே அவரை தமிழக போலீஸ் கைது செய்தது. பொடா சட்டத்தின் கீழ்வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் பிறகு அவரை மத்திய அரசு காப்பாற்றும் என்று நம்பப்பட்டது. ஆனால், துணைப் பிரதமர் அத்வானி-ஜெயலலிதாவின் அண்டர்கிரவுண்ட் டீல் காரணமாக வைகோவை மத்திய அரசு கைவிட்டது.
அதே நேரத்தில் ஜாமீனில் வெளியே வர மறுத்துவிட்டார் வைகோ. தன் மீது பொடா சட்டத்தின் 21வது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பிரிவையே எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுள்ளார் வைகோ.
இந்தப் பிரிவு அரசியல் சட்டம் கொடுத்துள்ள தனி மனித பேச்சுரிமைக்கு எதிராக இருப்பதால் பொடா சட்டத்தில்இருந்து இந்தப் பிரிவை அகற்ற வேண்டும் என வைகோ கோரியுள்ளார்.
இந் நிலையில் திமுகவின் தொடர் வற்புறுத்தல் காரணமாக பொடா மறு ஆய்வுக் கமிட்டி என்ற ஒன்றை மத்திய அரசுஉருவாக்கியுள்ளது. இந்தக் கமிட்டி பொடா சட்டத்தின் கீழ் நடந்துள்ள கைதுகள் குறித்து ஆராயும் என்றும்,தவறான கைதுகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கமிட்டி செயல்படுவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.
பொடா விவகாரத்தை திசை திருப்புவதற்காகவும், காலத்தைக் கடத்தவுமே இந்தக் கமிட்டிஉருவாக்கப்ப்டடுள்ளதாக சமீபத்தில் வைகோவைச் சந்தித்துவிட்டு வந்த காங்கிரஸ் ஜனநாயகப் பேரைவத்தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந் நிலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் வைகோஅடுத்த மாதம் 11ம் தேதியுடன் ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்கப் போகிறார்.
இந்த தினம் எங்களைப் பொறுத்தவரை தியாகிகள் தினம் என்று மதிமுக அறிவித்துள்ளது. இதனால் இனி ஜூலை11ம் தேதியை மதிமுக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications