திருட்டுக் கும்பல் தாக்கி மூதாட்டி சாவு: தம்பதி படுகாயம்- நகை, பணம் கொள்ளை
வேலூர்:
வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கொள்ளைக் கும்பல் தாக்கியதில் மூதாட்டி பலியானார். வீட்டில் இருந்தநகை, பணத்துடன் அக் கும்பல் தப்பியோடியது.
வாலாஜாபாத் அருகே குணசேகரன் என்ற தொழிலதிபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்குஇன்று அதிகாலை கொள்ளைக் கும்பல் வந்துள்ளது. வீட்டின் மேல் பகுதியில் குணசேகரன் தனது மனைவி,குழந்தைகளோடு உறங்கிக் கொண்டிருந்தார்.
கீழ் பகுதியில், அவரது வயதான தாயார் சென்னம்மாள் தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலின் சப்தம் கேட்டு விழித்தெழுந்த சென்னம்மாள் சப்தம் போடமுயன்றுள்ளார். இதையடுத்து அக்கும்பல், சென்னம்மாளை சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் அவர் பரிதாபமாகஇறந்தார்.
தாயரின் சப்தம் கேட்ட குணசேகரன், மனைவியோடு கீழே வந்தார். அவர்களையும் கொள்ளைக் கும்பல் தாக்கியது. இதில் இருவரும் காயமடைந்தனர். பின்னர் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் பணத்துடன் கொள்ளைக் கும்பல் தப்பிச் சென்றது.
காயமடைந்த குணசேகரனும், அவரது மனைவியும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications