For Daily Alerts
Just In
தஞ்சை பெரிய கோவில் யானை சாவு: ஜெ. தானம் தந்தது
ஈரோடு:
தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 8 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த 18 வயது பெண் யானையான குந்தவைஉடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தது.
இந்த யானை முதல்வர் ஜெயலலிதாவால் கோவிலுக்கு வழங்கப்பட்டதாகும். அவருக்கு கடந்த 1995ம் ஆண்டில்தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் இந்த யானயை பரிசாக வழங்கினார்.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் அன்பைப் பெற்ற யானையான குந்தவைக்கு நேற்று திடீரென்று உடல்நிலக்குறைவு ஏற்பட்டது. உணவு சாப்பிட மறுத்த குந்தவை, இரவில் மரணமடைந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கோசலராமன் உள்ளிட்டோர் கோவில் யானைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். இன்று பிற்பகல் கோவில் வளாகத்தில் அந்த யானை முழு மரியாதைகளுடன் அடக்கம்செய்யப்பட்டது.
நூற்றுக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.


