போதையில் வீடு புகுந்து பெண்களிடம் கலாட்டா செய்த ஏட்டையா!!
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் விழாவுக்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட போலீஸ்காரர்வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் வம்பு செய்தார். இதையடுத்து பொது மக்களை அவரைப் பிடித்து, அடித்துஉதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வா.புதுப்பட்டி என்ற கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இதற்குப் பாதுகாப்புதர வத்திராயிருப்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் அனுப்பப்பட்டார்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய அவரே அங்கு விற்ற கள்ளச்சாரயத்தைக் குடித்துவிட்டு முழு போதையில்தடுமாறினார். பின்னர் அங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்த அந்த ஏட்டையா பெண்களிடம் வம்பு செய்துள்ளார்.
இதையடுத்து ஒன்று திரண்ட ஊர் மக்கள் அவரைப் பிடித்து அடித்து, உதைத்தனர். பின்னர் அவரை ஒரு மரத்தில்கட்டி வைத்தனர். தகவல் அறிந்த வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து ஏட்டையாவை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.
ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அவரைபோலீசார் கைது செய்தனர்.


