திருட்டு விசிடி வழக்கில் அழகிரிக்கு ஜாமீன்
மதுரை:
உரிமம் இல்லாத விசிடிக்களை இருப்பு வைத்திருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அழகிக்கு மதுரைநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அவருக்கு ஜாமீன்கிடைக்காததால், அவர் விடுதலை செய்யப்படவில்லை.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அழகிரி. இந் நிலையில்மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது வீடியோ கடையில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது உரிமம் இல்லாத 4,000 விசிடிக்கள் இருந்ததாக கூறி அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், அழகிரிமீது இன்னொரு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்டதால் அழகிரி மற்றும் வீடியோ கடையின் மேலாளர் தாமோதரன்ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று மதுரை 5-வது நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்திராணி, அழகிரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இருப்பினும், தா.கி. கொலை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால், அழகிரி சிறையிலிருந்துவிடுவிக்கப்படவில்லை.


