ஜெவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை: இளங்கோவன்
சென்னை:
ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் போன்ற அதி தீவிர மத வெறி பிடித்த அமைப்புகளுடன் நெருங்கிய உறவுவைத்துள்ள ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரும் பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பா.ஜ.க.வுடன் உறவு வைத்துள்ள சில கட்சிகளுடன்கூட்டணி சேரவே எங்களுக்கு சில சங்கடங்கள் உள்ளன. இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற அதிதீவிர மத வெறி பிடித்த அமைப்புகளுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள ஜெயலலிதாவுடன் கூட்டணிவைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை.
மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். தேர்தல் சமயத்தில்அதுகுறித்து முடிவெடுக்கப்படும். தமிழகத்திலும் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தான் இறுதிமுடிவு செய்யப்படும்.
மதச்சார்பற்ற கட்சிகளுக்கு சோனியா காந்தி விடுத்துள்ள அழைப்பை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.அவர்களுக்கு அந்த அருகதை இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயல் 24 கட்சிகளுடன் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகூட்டணி அமைப்பதை கேலி செய்ய ஏதாவது தகுதி இருக்கிறதா என்பதை அந்தக் கட்சித் தலைவர்கள் யோசித்துப்பார்த்துவிட்டு பேச வேண்டும் என்றார் இளங்கோவன்.


