தண்ணியடித்துவிட்டு இரவில் ரோட்டில் கலாட்டா செய்த இளம்பெண்
கோயம்புத்தூர்:
கோவை நகரில் இரவு நேரத்தில் தண்ணிடித்துவிட்டு ரோட்டில் கலாட்டா செய்த இளம் பெண் கைதுசெய்யப்பட்டார்.
ரேஸ்கோர்ஸ் காவல் நிலையப் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி ரோட்டில் இரு நாட்களுக்கு முன் இரவுநேரத்தில் ஒரு இளம் பெண் டி-ஷர்ட், ஜீன்ஸ் உடையில் போதையில் நடமாடிக் கொண்டிருந்தார்.
புல் மப்பில் இருந்த அவர் ரோட்டில் நடந்து செல்வோரிடம் வம்பும் செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து அவரைரேஸ்கோர்ஸ் போலீஸார் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரை ஆங்கிலத்திலும் தமிழிலும் திட்டினார். நேரம் நள்ளிரவை நெருங்க,இரவு நேரத்தில் இளம் பெண்ணை காவலில் வைத்திருந்தால் வம்பில் மாட்டுவோம் என்று பயந்த போலீசார்அவரை காந்திபுரம் மகளிர் காவல் நிலைய பெண் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
முழு போதையில் இருந்த அந்தப் பெண்ணை மகளிர் போலீசார் காவல் நிலையத்திலேயே தூங்க வைத்தனர். நேற்றுகாலை போதை தெளிந்தவடு மீண்டும் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் அவரை பெண் போலீசார் ஒப்படைத்தனர்.
அப்போது நாகரீகமாக போலீசாரிடம் அவர் நடந்து கொண்டார். போதையில் தான் உளறியது, வம்பு செய்ததுஎதுவுமே தனக்கு நினைவில்லை என்று கூறி அதற்காக மன்னிப்பும் கேட்டார் அந்தப் பெண்.
கோவை புறநகரில் வசிக்கும் அந்த இளம் பெண் இந்த ஆண்டு தான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியில் சேர காத்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் நண்பர்கள் அளித்த பார்ட்டியில்கலந்து கொண்டு பல பாட்டில் பீரை உள்ளே தள்ளிவிட்டு வீட்டுக்குக் கிளம்பியுள்ளார்.
போதை உச்சிக்குப் போக நடு ரோட்டில் கலாட்டா செய்துள்ளார். அவர் மீது பொது இடத்தில் ஒழுங்கீனமாகநடந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பெயர், விவரங்களைபோலீசார் வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


