For Daily Alerts
Just In
பொய் சொல்கிறது தமிழக அரசு: ஸ்டாலின் பாய்ச்சல்
தூத்துக்குடி:
தமிழக அரசின் நிதி நிலை சரியில்லை என்று மாநில அரசு கூறுவது மக்களை திசை திருப்பும் செயல் என்று திமுகதுணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த திமுக ஆட்சியின் மீது பழி போடுவதற்காகவே,தமிழக அரசின் நிதி நிலை சரியில்லை என்று பொய்ப் பிரசாரத்தில் அவ்வப்போது முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுவருகிறார்.
1 மணி நேர விழாக்களுக்குக்கூட பல கோடிகளை செலவழிப்பது மட்டும் சிக்கனமான நடவடிக்கையாகுமா என்றுஇந்த அரசைக் கேட்க விரும்புகிறேன்.
தற்காலிக ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஆளுங்கட்சியினன் தலையீடு அதிகமாக உள்ளது என்றார்.


