நேரம் சரியில்லாத கணவர்கள் !

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துஎரித்தார் மனைவி.

இந் நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், அரசு வேலை பறிபோனதால், கணவரை தூக்கி எறிந்து விட்டுவேறு கல்யாணம் செய்து கொண்டார் இன்னொரு பெண்.

ஏர்வாடியைச் சேர்ந்தவர் சைய்யது இப்ராகிம். இவரது மனைவி பாத்திமா. மனைவியின் நடத்தை குறித்து அடிக்கடிசந்தேகப்படுவாராம் இப்ராகிம். இதனால் இருவருக்கும் சண்டை நடப்பது சகஜம்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கியெழுந்தார் பாத்திமா. கணவர் இப்ராகிம் தூங்கிக் கொண்டிருந்தபோது,தனது தாயார் சுல்தான் ஜின்னா மற்றும் 2 பேருடன் சேர்ந்து இப்ராகிம் மீது மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்தார்.

படுகாயமடைந்த இப்ராகிம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலை காலி.. கணவருக்கு கல்தா...

கணவர் பார்த்து வந்த சாலைப்பணியாளர் வேலை பறிக்கப்பட்டதால், அவரை கைகழுவிய மனைவி வேறுஒருவரை கல்யாணம் செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியங்கலத்தைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் சாலைப் பணியாளராக இருந்து வந்தார்.அரசு வேலையில் இருப்பதால் அவருக்கு அருக்காணி என்ற பெண்மணி தனது மகள் பொன்மணியைக் கட்டிக்கொடுத்தார்.

இந் நிலையில் கடந்த ஆண்டு சாலைப் பணியாளர்களை அரசு திடீரென்று டிஸ்மிஸ் செய்தது. இதனால்கணேசமூர்த்தியின் வேலையும் போனது. அரசு வேலையை நம்பித்தானே திருமணம் செய்து கொடுத்தோம்,வேலை போன பின் புருஷன் எதற்கு என்று எண்ணிய அருக்காணி, பொன்மணியை தன்னுடன் அழைத்துச்சென்றுவிட்டார்.

பலமுறை போய் கணேசமூர்த்தி கூப்பிட்டும் வர மறுத்து விட்டார். வந்தால் அரசு வேலையுடன் வா, இல்லாவிட்டால்போய் விடு என்று கண்டிப்பாகவும் கூறி விட்டார் பொன்மணி. அரசு வேலை கிடைக்காத கணேசமூர்த்தி நொந்துபோய் இருக்க, இந் நிலையில், பொன்மணிக்கு சைக்கிள் கடை வைத்துள்ள ரங்கநாதன் என்பவருடன் சமீபத்தில்மறுமணம் நடந்தது.

இந்தச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த கணேசமூர்த்தி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். பொன்மணி,மாமியார், புதிதாக கல்யாணம் செய்து கொண்ட ரங்கநிாதன் ஆகியோர் மீது

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் அவர் கோரியுள்ளார்.

இது தான் கலி காலமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+