For Daily Alerts
Just In
நேரம் சரியில்லை... ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை
சேலம்:
சேலம் அருகே தனக்கு தானே ஜோதிடம் பார்த்த ஜோதிடர் ஒருவர் தனக்கு நேரம் சரியில்லை என முடிவுக்கு வந்துவிஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தை அடுத்துள்ள சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல்(வயது 34). ஜோதிடரான இவருக்குமனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
தனக்கு தானே தனது ஜாதகத்தின் பலன்களை பார்த்தார். தனக்கு மரணயோகம் நெருங்கிய விட்டது என்றும், நேரம்சரியில்லை என்றும் ஜாதக பலனில் இருப்பதாக சக நண்பர்களிடம் ஜெயவேல் புலம்பியுள்ளார்.
இந் நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்தார். வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்த அவரைஅப்பகுதி மக்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜோதிடர்ஜெயவேல் இறந்தார்.


