For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதிக் கலவர சூழ்நிலை: கண்டதேவி தேரோட்டம் ரத்து

By Staff
Google Oneindia Tamil News

தேவகோட்டை:

மிகப் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கண்டதேவி கோவில் தேரோட்டம் மீண்டும் ஜாதிப் பிரச்சனை காரணமாகநிறுத்தப்பட்டது.

தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில். இங்கு ஆனி மாதத் தேரோட்டம்மிகப் பிரசித்தி பெற்றது. ஆனால், ஆண்டாண்டுகாலமாக நடந்து வந்த இந்தத் தேரோட்டத்தில் ஜாதி புகுந்துவிளையாட ஆரம்பித்துவிட்டது.

தேரை வடம் பிடித்து இழுக்க தலித்களை அனுமதிக்க வருகின்றனர் இன்னொரு ஜாதியினர். இதனால் பலமுறைஜாதிக் கலவரம் வெடித்து பல உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்த மோதலால் 1998ம் ஆணடு முதல் 2001ம் ஆண்டு வரை தேரோட்டமே ரத்து செய்யப்பட்டுவிட்டது.ஒவ்வொரு ஆண்டும் தேரோட்ட தினம் நெருங்கும்போதெல்லாம் இந்தப் பகுதியில் ஜாதிக் கலவர அபாயம்சூழ்ந்துவிடும். இதனால் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந் நிலையில் கடந்த தேரை தலித்களும் சேர்ந்து இழுக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், சில அதிகாரிகள் செய்த குழறுபடியாலும் ஜாதி துவேசத்தாலும் தலித்கள் வடம் பிடிக்கஅனுமதிக்கப்படவில்லை. தேரோட்டத்தை இன்னொரு ஜாதியினர் மட்டுமே நடத்தினர். அவர்களுக்கு போலீசாரும்உடந்தையாக இருந்ததாக தலித்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து இந்த ஆணடு தலித்கள் தாங்களும் கட்டாயம் வடம் பிடித்து இழுப்போம், அதை வேறுஜாதியினருடன் இணைந்து போலீசாரோ அதிகாரிகளோ தடுத்தால் ஜாதிக் கலவரம் வெடிக்கும் என தலித் இனத்தலைவர் எச்சரித்தனர்.

அதே நேரத்தில் தலித்களை வடம் பிடிக்க விட மாட்டோம் என இன்னொரு ஜாதியினரும் முரண்டு பிடித்தனர்.இதையடுத்து கலெக்டர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.

இந் நிலையில் நேற்று தேதோராட்டம் நடப்பதாக இருந்தது. கலெக்டர் சந்தோஷ் பாபு, ஐ.ஜி. ராஜேந்திரன், டிஐஜிஅலெக்சாண்டர் மோகன், எஸ்.பி. அபின் தினேஷ் மோடக், உதவி கலெக்டர், மற்றும் இப் பகுதியைச் சுற்றியுள்ளகாவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களின் நேரடிக் கண்காணிப்பில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டது.

மதுரை, மணிமுத்தாறு, பழனி, திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கையில் இருந்து ஆயிரக்கக்கானஅதிரடிப் படையினரும், ஆயுதப் படை போலீசாரும் கண்டதேவியில் குவிக்கப்பட்டனர்.

கண்டதேவிக்கு வரும் சாலைகளில் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்துவாகனங்களும் சோதனையிடப்பட்டன. இரு சமூகங்களையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் போலீசாரின் நேரடிக்கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

மேலும் ஆயிரக்கண்ககான போலீசார் மதுரையிலும் தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளிலும் தயார் நிலையில்வைக்கப்பட்டிருந்தனர்.

தேரோட்டம் மாலையில் நடப்பதாக இருந்தது. காலை வரை இரு ஜாதியினருடனும் சமாதானப் பேச்சு நடந்தது.ஆனால், இரு தரப்பினரும் விட்டுத் தர தயாராக இல்லாததால் பெரும் டென்சன் பரவியது. தாழ்த்தப்பட்டவர்களும்இன்னொரு ஜாதியினரும் கோவில் அருகே ஆயிரக்கணக்கில் கூடினர்.

இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும்அமைதியாக இருக்குமாறு சமாதானம் செய்தனர். நாங்கள் கட்டாயம் வடம் பிடிப்போம் என தலித்கள்கூறிவிட்டனர்.

இதையடுத்து பெரும் கலவர சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தேரோட்டத்தை ரத்து செய்ய அதிகாரிகள்முடிவு செய்தனர். இரவு வரை நிலைமையைக் கண்காணித்த கலெக்டர் சென்னையில் உயர் அதிகாரிகளுடன்பேசினார். அவர்களும் தேரோட்டத்தை ரத்து செய்துவிட அறிவுறுத்தினர்.

இந் நிலையில் இரவு 8.30 மணிக்கு தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X