ராஜீவையும் கைது செய்திருப்பார் ஜெ: கருணாநிதி விமர்சனம்
சென்னை
பொதுக் கூட்டங்களில் பட்டாசு விபத்து ஏற்பட்டால் கூட, அந்தக் கூட்டத்தில் பேசுபவர்களையும் கைது செய்யும்கேவலமான சம்பவம், குதர்க்க மதி படைத்த ஜெயலலிதா ஆட்சியில் மட்டுமே நடக்க முடியும் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில், பட்டாசு வெடித்து ஏற்பட்டவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்து இறந்துள்ளார். இதற்காக அந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்முல்லைவேந்தனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது இந்த அரசு.
பட்டாசு வெடித்து படுகாயமடைந்து இறந்ததற்காக அந்தக் கூட்டத்தில் பேச வந்தவரை கைது செய்யும் குதர்க்க மதிஜெயலலிதா போன்றவர்களிடம் மட்டுமே இருக்கும்.
1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தனுவின் வெடிகுண்டில் சில காவல்துறை அதிகாரிகள் மாண்டிருந்து, ராஜீவ்காந்தி ஒருவேளை பிழைத்திருந்தால் அவரையும் கூட கைது செய்து பார்த்திருப்பார்கள் இந்த ஆட்சியினர்.
ராஜீவ் காந்தி கொலை சம்பவம் திடடமிட்ட சதிச் செயல். ஆனால் ராயக்கோட்டைச சம்பவம் எதேச்சையாகநடந்தது. அதிமுகவில் சேர முல்லைவேந்தன் மறுத்து விட்டதால், பழி வாங்கும் நோக்கில் அவரைக் கைதுசெய்துள்ளனர் இந்த ஆட்சியினர்.
சிறைச்சாலையிலும் முல்லைவேந்தனுக்குப் பாதுகாப்பில்லை. ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளரெளடியை வைத்து கழுத்து நரம்பு அறுந்து போகும் அளவுக்கு அவரை தாக்கியுள்ளனர் இந்த ஆட்சியாளர்கள்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதற்கிடையே இந்த வழக்கில் இருந்து முல்லைவேந்தனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


