மதிமுகவினர் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றம்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு ஒராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, அரசுக்குஎதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மதிமுகவினர் வீடுகளில் கறுப்புக் கொடிஏற்றப்பட்டுள்ளது.
வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூர் பகுதி மதிமுகவினர் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிஅரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென, பெரம்பலூர் மாவட்டச் மதிமுக முடிவு செய்தது.
இதையடுத்து வைகோவை விடுதலை செய்யக் கோரியும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் மதிமுகவினர் வீடுகளில்கறுப்புக் கொடி ஏற்றினர்.
மேலும் அரியலூர் பகுதி மதிமுகவினர் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். வைகோ கைது செய்யப்பட்டநாளிலிருந்து அரியலூர் நகர பொறுப்பாளர் செல்லப்பா கறுப்புச் சட்டை மட்டுமே அணிந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications