தமிழக விவசாயிகள் நிலை படுமோசம்: கர்நாடகக் குழு ஒப்புதல்
தஞ்சாவூர்: தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நிலைமை படுமோசமாக உள்ளது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல்அவதிப்படுகிறார்கள் என்று கர்நாடக விவசாயிகள் குழுத் தலைவர் புட்டண்ணய்யா வேதனையுடன்தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் புட்டண்ணய்யாவின் தலைமையில் தமிழகம்வந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை அவர்கள் சுற்றிப் பார்த்து இங்குள்ள நிலை குறித்து ஆய்வுமேற்கொண்டனர்.
காவிரி கடைமடை பகுதியான திருவாரூக்கும் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புட்டண்ணய்யா,நாங்கள் நினைத்தது போல இங்கு நிலைமை இல்லை. மிகவும் மோசமாக உள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் சுத்தமாக தண்ணீர் இல்லை. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது என்றார்.
தமிழக காவிரி டெல்டா பகுதியில் 3 போக சாகுபடி நடப்பதாக கர்நாடகத்தில் கருத்து நிலவுவது பொய்யானதுஎன்பதை தற்போது கர்நாடக விவசாயிகள் குழு புரிந்து கொண்டிருப்பதாக அவர்களுடன் சென்ற தமிழகவிவசாயிகள் குழுவைச் சேர்ந்த ஒரு விவசாயி தெவித்தார்.
காவிரிப் பிரச்சனைக்கு அரசியல், நீதிமன்றம் தவிர்த்து விவசாயிகளைக் கொண்டே தீர்வு காணும் முயற்சியில் சிலசமூக சேவை அமைப்புகள் இறங்கியுள்ளன. இரு மாநில விவசாயிகளையும் சந்தித்துப் பேச வைத்தும், இரு மாநிலவிவசாயிகளும் ஒருவரது நிலையை ஒருவர் நேரில் பார்வையிடவும் இந்த அமைப்புகள் முயற்சி எடுத்துள்ளன.
இதன்படி தமிழக விவசாயிகள் கர்நாடகம் வந்து சென்றனர். இப்போது கர்நாடக விவசாயிகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications