For Daily Alerts
Just In
தமிழகத்துக்கு கூடுதலாக 1 லட்சம் டன் அரிசி: மத்திய அரசு வழங்கியது
டெல்லி:
வறட்சியில் சிக்கித் தவித்த தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதலாக 1 லட்சம் டன் அரிசியை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகம் காவிரியில் நீரை விடாததாலும் அரிசிவிளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை தவிர்த்த 28 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. மத்திய அரசிடம்வறட்சி நிவாரணம் கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் தமிழகம் வந்து ஆய்வு செய்தனர். அறிக்கையையும் சமர்பித்தனர்.
இதையடுக்கு தமிழகத்துக்கு மேலும் 1 லட்சம் டன் அரிசியை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறைவிடுவித்துள்ளது.


