ஜம்முவில் பாரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி? திடீரென வெடித்த துப்பாக்கி! நூலிழையில் தப்பிய காட்சிகள்!
ஜம்மு: ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பாரூக் அப்துல்லா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அவர் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை முதலமைச்சர் சுரீந்தர் சௌதரி இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த பி.எஸ். சௌகான் என்பவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தார்.

அப்போது தான் இந்த தாக்குதல் முயற்சி சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாரூக் அப்துல்லா மற்றும் துணை முதலமைச்சர் சுரீந்தர் சௌதரி இருவரும் திருமண மண்டபத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த போது, வெளியே காத்திருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபர் கமல் சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் ஜம்முவில் உள்ள புராணி மண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சுமார் 70 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது. அவர் திருமண மண்டபம் அருகே காத்திருந்து, பாரூக் அப்துல்லா மற்றும் துணை முதலமைச்சர் சுரீந்தர் சௌதரி வெளியே வரும் நேரத்தில் துப்பாக்கியால் சுட முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு போலீசார் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.
ஒரு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அவரை தடுக்க முயன்றபோது அவர் ஒரு முறை துப்பாக்கி சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் போலீசார் உடனடியாக அந்த நபரை பிடித்து கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பக்கட்ட தகவலின்படி அவர் மது போதையில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
#WATCH | Jammu, J&K: An incident of firing occurred at a function where JKNC chief Farooq Abdullah and Deputy CM Surinder Choudhary were present. One person has been arrested. No injuries have been reported.
— ANI (@ANI) March 11, 2026
CCTV visuals showing the moment when the incident took place. pic.twitter.com/pnoD3f9fRJ
இருப்பினும் இந்த தாக்குதல் முயற்சியின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் முழுமையாக விசாரித்து வருகின்றனர். உயர்மட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இப்படியான சம்பவம் நடந்தது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜம்முவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்














Click it and Unblock the Notifications