வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்
சென்னை: தங்கத்திற்கு இந்தியாவில் கலாச்சார ரீதியாக முக்கியமான இடம் இருக்கிறது. தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் சூழலில், அதை வாங்க முடியாமல் பொதுமக்கள் வேதனை அடைகிறார்கள். இதற்கிடையே இயற்கை தங்கத்தைப் போலவே செயற்கை தங்கம் வரப் போவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஒரு காலத்தில் தங்கத்தை விட வைரத்திற்கு மவுசு அதிகமாக இருந்தது. வைரத்தை வாங்குவதே கடினம் என்ற சூழல் இருந்தது. ஆனால், எப்போது ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரம், அதாவது lab grown diamonds வந்ததோ, அப்போதே வைரத்தின் மீதான மோகம் குறைய ஆரம்பித்துவிட்டது. இப்போது வைரம் வாங்குவது ரொம்பவே ஈஸியும் ஆகிவிட்டது.

செயற்கை வைரம்
தொடக்கத்தில் ஆய்வக வைரம் பார்க்கவே தனித்து மோசமாகத் தெரியும். ஆனால், தொழில்நுட்பம் வளர வளர இப்போது ஆய்வக வைரமும் இயற்கை வைரத்திற்கு இணையாக இருக்கிறது. சாதாரணமாக ஒருவரால் இரண்டிற்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவை இரண்டும் ஒரே போல இருக்கிறது. இந்தச் சூழலில் தான் இப்போது ஆய்வக தங்கம் குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரைத் தங்கம் என்பது வெறுமன ஒரு உலோகம் அல்லது பொருள் இல்லை. அது கலாச்சார ரீதியாகவே இந்தியர்களுடன் இணைந்து இருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் சுப காரியங்களில் தங்கம் தவறாமல் இடம் பெறுகிறது. இதனால் இந்த செயற்கை தங்கம் எந்தளவுக்கு வேறுபட்டது. இதில் இருக்கும் சிறப்புகள் என்ன என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஆய்வக தங்கம்
ஆய்வகத் தங்கம் என்பது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படாது. மாறாக ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படும் தங்கத்தைக் குறிக்கிறது. இது இயற்கை தங்கத்துடன் வேதியியல் ரீதியாக ஒத்துப் போகும். அணு அமைப்பு, அடர்த்தி, உருகு நிலை, காரட் நிலைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை. இவை ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் அணு அணுவாக உருவாக்கப்படும். அதாவது இயற்கையில் எப்படி தங்கம் உருவாகுமோ அதை அப்படியே ஆய்வகத்தில் உருவாக்குவார்கள். இது கவரிங் போலப் பொய் தங்கம் இல்லை.. 100% உண்மையான தங்கம்!
எல்லாமே ஒர்ஜினல் மாதிரி
ஆஹா, அப்போது தங்கத்தின் மதிப்பு குறைந்துவிடுமா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. இல்லை இந்த செயற்கை தங்கம் இப்போது ஆய்வக சோதனைகளிலேயே உள்ளன. செயற்கை வைரத்தைப் போல கமர்ஷியல் உற்பத்திக்கு வரவில்லை. அதற்குப் பல ஆண்டுகளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சோதனை முறையில் இருப்பதால் இது இயற்கை தங்கத்தை விட சற்று விலை அதிகமானதாகவே இருக்கிறது. மேலும், இதை உற்பத்தி செய்வதும் சற்றே சிக்கலான செயல்முறை. அதேநேரம் இவை கமர்ஷியல் உற்பத்தியை ஆரம்பித்தால் செயற்கை தங்கத்திற்கும் அசல் தங்கத்திற்கும் வேறுபாடே காட்ட முடியாது.
தூய்மையிலும் இது இயற்கை தங்கத்தைப் போலவே 24 கேரட் (99.9% தூய்மை) வரை சுத்திகரிக்கப்படலாம். அதை 22 காரட் மற்றும் 18 கேரட் நகைகளாகவும் உருவாக்க முடியும். அடர்த்தி, வளைந்து கொடுக்கும் தன்மை, நீடித்த உழைப்பு, பளபளப்பு அனைத்தும் ஒரே மாதிரி இருக்கும். எனவே, செயற்கை தங்கத்திற்கும் இயற்கை தங்கத்திற்கும் வேறுபாடே இருக்காது.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்!
தங்கம் என்பது எப்போதுமே பணவீக்கத்திற்கு எதிரான ஒன்றாக இருக்கிறது. அதாவது பணவீக்கத்தில் இருந்து உங்கள் சேமிப்பின் மதிப்பை நீங்கள் காப்பாற்ற விரும்பினால் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதுவே பாதுகாப்பான முதலீடாகும். தங்கம் என்பது குறிப்பிட்ட அளவு மட்டுமே இயற்கையில் உள்ளது என்பதாலேயே இந்தளவுக்கு அதன் மதிப்பு உச்சத்தில் இருக்கிறது. அதேநேரம் செயற்கை தங்கம் வந்துவிட்டால் இயற்கை தங்கத்தின் மதிப்பு சரியலாம்.
அதேநேரம் இது நடக்க குறைந்தத பல ஆண்டுகள் ஆகும். எனவே, தங்க மார்கெட்டில் இப்போது ஏற்பட்டுள்ள சரிவுக்கு இது காரணம் அல்ல. அதற்கு சர்வதேச அரசியல் தொடங்கி பல்வேறு காரணங்கள் உல்ளன. அதேநேரம் செயற்கை தங்கம் வர பல ஆண்டுகள் ஆகும் என்றாலும் கூட அதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கு இல்லை!
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
SGB தங்கப் பத்திரம் வைத்திருப்பவரா நீங்க? லாபத்தில் கைவைக்கும் புதிய வரி விதிப்பு.. இதோ முழு விபரம் -
நகை கடன் தள்ளுபடி ரெடி? முக்கோணம் எடுக்கும் கோல்டு லோன் வாக்குறுதி.. ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம்! -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
தங்கம் & வெள்ளி.. செதில் செதிலாக உடைந்து விழுந்த கோட்டை.. தப்பிக்க 10 வழிகள்.. வாங்கலாமா? வேண்டாமா? -
டன் டனாக கொட்டி கிடக்கும் தங்க புதையல்.. ஆனாலும் KGF மூடப்பட்டது ஏன் தெரியுமா! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா














Click it and Unblock the Notifications