Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகி நம்மோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் வந்து விடும் என ஏக எதிர்பார்ப்பில் இருந்த நடிகர் விஜய், திமுக கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்தததில் மிகவும் அதிர்ப்தியடைந்தார். காங்கிரசை நம்பி காலத்தை வீணாக்கி விட்டோமோ? நமக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதோ? என்றெல் லாம் கவலைப்பட்டார் விஜய்.

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பை விட, விஜய்யின் தற்போதைய பெரும் கவலை 'கூட்டணி' என்பதுதான். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைத் தங்களது கூடாரத்திற்கு இழுத்து வர வேண்டும் என்பதுதான் விஜய்யின் மாஸ்டர் பிளான். இதற்காக தனது கட்சியின் டாப்-3 நிர்வாகிகளிடம் (முக்கிய ஆலோசகர்கள் மற்றும் டெல்லி வரை செல்வாக்குள்ள புள்ளிகள்) இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் விஜய்.

congress

"அண்ணே... கவலைப்படாதீங்க, காங்கிரஸ் கை நம்ம பக்கம் தான் வரும். திமுக சீட் பங்கீட்டில் அவர்களைக் கையாண்ட விதம் அவர்களுக்கு அதிருப்தியைத் தந்திருக்கிறது. நாம் ஒரு கௌரவமான இடங்களைக் கொடுத்தால் போதும், ராகுல் காந்தி தரப்பு நம்மைத் திரும்பிக் பார்க்கும்" என அந்த மூன்று முக்கிய நிர்வாகிகளும் விஜய்க்கு ரத்தத்தில் எழுதித் தராத குறையாக உறுதி அளித்திருந்தார்களாம்.

பாருங்க ராகுல் பனையூர் வருவார் என்றார்கள். ஆனால், நிஜத்தில் நடந்தது வேறு. மார்ச் 4-ம் தேதி அன்று திமுக-காங்கிரஸ் இடையே 28+1 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக, விஜய்யின் அந்த 'கூட்டணி கனவு' தவிடுபொடியானது.

ராகுல் காந்தி அப்செட்

இந்த நிலையில், ராகுல்காந்தியின் உள்வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது,'' திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டதில் ராகுல்காந்தியின் ரோல் எதுவும் இல்லை. அவரைப் பொறுத்தவரை, கூட்டணி ஆட்சி மற்றும் கூடுதல் சீட் உட்பட ராகுல் வைத்த கோரிக்கையை ஏற்றால் மட்டுமே திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் ; இல்லையேல், கூட்டணி உறவை முறித்துக் கொள்ளலாம். விஜய் யுடன் கூட்டணியை ஏற்படுத்தலாம் என்பதுதான்.

இடையில் பல இடர்பாடுகள். காங்கிரசை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக எடுத்த பகீரத முயற்சியில், ராகுலை மீறி எல்லாம் நடந்தது. திமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்று ராகுல் எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி. அதனால், என்னமோ பண்ணிக்கொள்ளுங்கள் என சோனியாகாந்தியிடமும், கார்கேவிடமும் கடிந்து கொண்டுவிட்டு திமுக கூட்டணி விவகாரத்திலிருந்து விலகிக்கொண்டு விட்டார் ராகுல். அடுத்த 24 மணி நேரத்தில் அவரது விருப்பத்துக்கு எதிராக நடந்து முடிந்தது. அதனால் நீங்கள் ராகுல்காந்தியை தவறாக எண்ண வேண்டாம்'' என்று விஜய்க்கு சொல்லப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

விஜய்க்கு சொல்லப்பட்ட தகவல்

மேலும், நீங்கள் விரும்பினால் புதுச்சேரி மற்றும் கேரளாவில் உங்களுடன் கூட்டணி வைக்க ராகுல் விரும்புகிறார். அது குறித்து பேசலாமா? என்றும் விஜய்யிடம் கோரப்ப ட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு புதுச் சேரியில் கூட்டணியை முறித்துக்கொள்ள திமுக தலைமை இடம் கொடுக்காது. அதனால் இதெல்லாம் சரிபட்டு வராது. திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்துக்கு மட்டும் தான் என ராகுல்காந்தி வெளிப்படையாக அறிவித்தால் புதுச்சேரி குறித்து பேசலாம். அல்லது புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிந்து விட்டது என அதிகாரப்பூர்வமாகத் தெரிந்தால் பேசலாம். இது எதுவும் நடக்காத போது, என்னால் இனியும் காத்திருக்க முடியாது என விஜய்யும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

இதெல்லாம் தெரிந்ததாலோ என்னவோ, என்.டி.ஏ. கூட்டணிக்குள் விஜய்யை இழுத்து க்கொள்ள பாஜக தலைமை சீரியஷாக வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறது என்கி றார்கள்.

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+