Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் சமீப காலமாக நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறைவந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மதுராந்தகம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேசினார். ஆனால் இந்த மூன்று கூட்டங்களிலும், பிரதமர் மோடி தனது உரைகளில் ஒரு முறை கூட அதிமுக என்ற வார்த்தையையோ அல்லது அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பெயரையோ குறிப்பிடவில்லை என்பது தான்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில். பாட்டாளி மக்கள் கட்சி, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமமுக உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் இணைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பக்கம் பார்வையை திருப்பி உள்ள பாஜக அதன் முக்கிய தலைவர்களை தமிழகத்திற்கு அடிக்கடி அனுப்பி வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பியூஸ் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி தமிழகத்தின் பக்கம் தலைகாட்டி வருகின்றனர்.

Tamil Nadu Assembly Election 2026 narendra Modi Edappadi Palaniswami

மோடி தமிழக வருகை

இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகம் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில வாரங்களில் மட்டும் மூன்று முறை பிரதமர் தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருச்சி, மதுராந்தகம், மதுரை என மூன்று கூட்டங்களில் பங்கெடுத்து இருக்கிறார் பிரதமர் மோடி. வழக்கமாக பிரதமர் வரும்போது எல்லாம் இந்தியில் தான் உரையாற்றுவார்.

அதிமுக கூட்டணி

ஆனால் தற்போது தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு நிகழ்ச்சிகள் அல்லாது பாஜகவின் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பிற கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். தனது பேச்சில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டு பேசும் பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட அதிமுக திட்டங்கள் குறித்து பேசவில்லை.

எடப்பாடி பழனிசாமி

மேலும் அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என ஒரு வார்த்தை கூட இதுவரை பிரதமர் மோடியின் பேச்சில் வெளிப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிமுக பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தான் தலைமை என சொன்னாலும் கூட்டணி ஆட்சி என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கூட்டணி அரசியல் சிக்னல்

அதிமுகவினர் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி என சொன்னாலும் இதுவரை பாஜக அதனை சொல்லாமல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். பீகாரில் நித்திஷ் குமாருக்கு நிகழ்ந்தது போல எடப்பாடி பழனிசாமிக்கு நிகழலாம் என்பதை பிரதமர் மோடி ஒரு சிக்னலாக கொடுத்து வருகிறார் தனது பேச்சின் மூலம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், பிரதமர் பாஜக ஆட்சி என சொல்லாமல் என்.டி.ஏ ஆட்சி என சொல்வது ஒரு கூட்டணியாக இருக்கிறோம் என்பதை காட்டவே என்கின்றனர் பாஜகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+