விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!
சென்னை: தோழமை கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தையை நாளைக்குள் முடிக்க திமுக தலைமை பேச்சுவார்த்தை குழுவிடம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விசிகவுக்கு 8 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக நேரடியாக 160 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் 175 இடங்கள் வரை களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
2021 சட்டசபைத் தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் 188 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இணைந்துள்ளன. இதனால் புதிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் முஸ்லீம் லீக் மற்றும் மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து தோழமை கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பிப்ரவரி 22ஆம் தேதியில் இருந்து திமுக மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், மக்கள் நீதி மய்யம், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், கருணாஸ், தமீமுன் அன்சாரி, ஆதித்தமிழர் பேரவை, தவாக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் தேமுதிகவை காரணம் காட்டி விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாக சொல்லப்படுகிறது. இதன்பின் திமுகவின் சீனியர்கள் பலரும் அந்தந்த கட்சித் தலைமையுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். இதற்கு பலன் கிடைத்துள்ளது.
விசிக 8 தொகுதிகளுக்கும், சிபிஐ 6 தொகுதிகளுக்கும் ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிறது. இதனால் அந்தக் கட்சிக்கு 4 தொகுதிகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக 160 தொகுதிகளுக்கு குறையாமலும், உதயசூரியன் சின்னம் 175 தொகுதிகளிலும் களமிறங்கக் கூடும் என்று தெரிகிறது.
திருச்சியில் பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிவு செய்து, திமுக கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு அண்ணா அறிவாலயம் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி!












Click it and Unblock the Notifications