ராஜகோபால் என்னை கொல்வேன் என மிரட்டினார்: ஜீவஜோதி
வேதாரண்யம்:
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், தன்னைக் கடத்திக் கொலை செய்ய முயன்றதாக ஜீவஜோதி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜகோபாலின் கூட்டாளிகளால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டதாக வழக்குநடந்து வரும் நிலையில் நேற்று முன் தினம் இரவு வேதாரண்யத்தில் உள்ள ஜீவஜோதியின் வீட்டில் புகுந்து தகராறுசெய்ததாக ராஜகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜீவஜோதி கூறுகையில், 15ம் தேதி இரவு ராஜகோபால், அவருடன் அவரது வக்கீல் மற்றும் வேறுசிலரும் எனது வீட்டுக்குள் நுழைந்தனர்.
என் குடும்பத்தினர் முன்னிலையில் என்னிடம், வரும் 21ம் தேதி வழக்கில் தனக்கு சாதகமாகச் சாட்சி சொல்லும்படிவற்புறுத்தினார்.
நான் அதற்கு மறுத்ததால், நீதிமன்றத்தில் எனக்கு ஆதரவாய் சாட்சி சொல்லவில்லை என்றால் உன் வீட்டுக்காரன்சாந்தகுமாருக்கு நேர்ந்த கதி தான் உனக்கும் ஏற்படும். உன் வீட்டுக்காரனை கொன்ற மாதிரியே, உன்னையும்கொன்னுடுவேன் என்று மிரட்டினர்.
இதைக் கேட்டு என் குடும்பத்தினரும் அக்கம் பக்கம் உள்ள எனது உறவினர்கள் அவரிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். உடனே ராஜகோபால் அவரது வக்கீல் மற்றும் உடன் வந்தவர்கள் கார்களில் தப்பிச் சென்றனர்.
என் கணவர் கொலை வழக்கில் நியாமான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். கடைசி வரை அதற்காகபோராடுவேன். எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் தமிழக முதல்வர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
ஆனால், ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல ஜீவஜோதி தரப்பில் அதிக பணம் கேட்டதாகவும், அந்த பேரம்படியாததால் தான் வாக்குவாதம் ஏற்பட்டு ராஜகோபாலன் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.
ஜீவஜோதியை கடத்தத் திட்டம்?
இதற்கிடையே ராஜகோபாலின் காரை வழியில் மடக்கிப் பிடித்த போலீசார் காரில் இருந்து மயக்க மருந்துபாட்டில்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஜீவஜோதியை காரில் மயக்கப்படுத்தி கடத்தஇவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் வசிய மருந்தும் இருந்ததாகத் தெரிகிறது. ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட ராஜகோபால், யாரோஜோதிடர் சொல்லித் தான் ஜீவஜோதியை 3வதாக மணம் முடிக்க முயன்றார்.
அந்த ஜோதிடமிருந்து தான் வசிய மருந்தையும் ராஜகோபால் வாங்கி வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications