ராஜகோபால்- செக்ஸ் டாக்டர் பிரகாஷ் தொடர்பு: ஜீவஜோதி புகார்
வேதாரண்யம்:
சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கும் செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கும் தொடர்பு இருப்பதாக ஜீவஜோதிகுற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணபவன் ஓட்டல் அதிபர்ராஜகோபல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜீவஜோதியைக் கைப்பிடிக்கவே பிரின்ஸை, ராஜகோபால் ஆள்வைத்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை வரும் 21ம் தேதி நடக்கிறது. இந் நிலையில் ஜீவஜோதியை அவரது மாமா வீட்டுக்கு வந்துராஜகோபால் கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜகோபால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு எதிராக சாட்டியம் சொல்லாமல் இருக்க அவரிடம் ஜீவஜோதி நிறைய பணம்கேட்டதாலும் பேரம் படியாததால் தான் கடத்தல் விவகாரமாக அதை மாற்றி அவரை மாட்டிவிட்டதாகவும்கூறப்படுகிறது.
இதை ஜீவஜோதி மறுத்து வருகிறார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், நான் ராஜகோபாலை வேதாரண்யத்துக்குஅழைக்க வில்லை. அவராகத்தான் அடியாட்களுடன் வந்து கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு சமாதானமாகசெல் என்று மிரட்டினார்.
நான் அவரிடம் பணம் கேட்கவும் இல்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. கோடி கோடியாகக் கொடுத்தாலும்வேண்டாம்.
21ம் தேதி விசாரணைக்காக கோர்ட்டுக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு சென்னை உதவி கமிஷனர் ராமச்சந்திரனிடம்மனு கொடுத்து உள்ளேன். பெரிய அரசியல்வாதிகளோடு ராஜகோபாலுக்கு தொடர்பு உள்ளது.
மேலும் சிறையில் இருக்கும் போது செக்ஸ் டாக்டர் பிரகாசுடன் அண்ணாச்சிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால்நான் சென்னை செல்லும்போது என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பயமாக இருக்கிறது. இதையெல்லாம்முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பேக்ஸ் மூலம் தெரிவித்துள்ளேன்.
ராஜகோபால் கைதையடுத்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைமணி தலைமையில் தனிப்படைபோலீசார் ஜீவஜோதியின் வீட்டுக்கு சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஜீவஜோதியின்வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.


