சென்னையில் திடீரென சூறைக்காற்று! தரையிறங்க முடியாதால் திருப்பி விடப்பட்ட விமானங்கள்! பயணிகள் தவிப்பு
சென்னை: சென்னையில் பலத்த சூறைக் காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் பாதிக்கப்பட்டன. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்கு சென்றது. இதே போன்று துபாய், அபுதாபி, வாரணாசி, டெல்லி, கொல்க்கத்தாவில் இருந்து வந்த 9 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. சில இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால், வெப்பத்தின் தாக்கம் தணிந்து இருந்தது. மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், இந்த வாரம் மீண்டும் வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.

தலைநகர் சென்னை உள்பட கடந்த சில நாட்களாக வெயில் உக்கிரம் காட்டி வந்த நிலையில், இன்று வானிலை அப்படியே மாறியது. சென்னையில் காலையில் சூறைக்காற்று வீசியது. பலத்த காற்று காரணமாக வெப்பமும் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. அதேநேரத்தில் புழுதியை அள்ளிக்கொண்டு காற்று பலமாக வீசியது.
இதனால் மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்களை போலீசார் வெளியேற்றினர். பலத்த காற்று காரணமாக சென்னையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாததால் திருப்பதிக்கு திருப்பி விடப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதேபோல, துபாய், அபுதாபி, வாரணாசி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த 9 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து விமானங்கள் வருகை தாமதம் ஆனதால் விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்க காத்திருந்த உறவினர்களும் தவிப்புக்கு உள்ளாகினர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications