கேரளா வேண்டாம்.. புதுச்சேரி மாஹேவில் பெட்ரோல் - டீசல் போடும் சேட்டன்கள்! லிட்டருக்கு ரூ.13 கம்மி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவை ஒப்பிடும்போதும் புதுச்சேரியின் மாஹேவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.13 வரை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கேரளாவை சேர்ந்த வாகன ஓட்டிகள் கேரளாவுக்கு பதில் மாஹேவிற்கு சென்று பெட்ரோல் - டீசல் நிரப்பி வருகின்றனர். கேரளாவை ஒப்பிடும்போதும் புதுச்சேரியின் மாஹேவில் பெட்ரோல் - டீசல் விலை குறைவாக இருப்பது ஏன்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கி உள்ளது. இன்று காலையில் 3வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 87 பைசாவும், டீசல் லிட்டருக்கு 91 பைசாவும் அதிகரித்தது.

kerala-motorists-rush-to-pudhcherry-cotrolled-mahe-for-cheaper-petrol-diesel-price

அதன்படி கேரளாவில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.62க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.100.47 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில் கேரளா அருகே புதுச்சேரியின் யூனியன் பிரதேச பகுதியாக இருக்கும் மாஹேவில் பெட்ரோல் - டீசல் விலை குறைவாக உள்ளது. மாஹேவில் இன்று காலையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.88.25க்கு விற்பனை செய்யப்பட்டது. இது கேரளாவின் டீசல் விலையை ஒப்பிடும்போது லிட்டருக்கு ரூ.12.22 குறைவாகும்.

அதேபோல் மாஹேவில் இன்று காலை ஒருலிட்டர் பெட்ரோல் ரூ98.60க்கு விற்பனையாகி வருகிறது. இது கேரளாவின் பெட்ரோல் விலையை ஒப்பிடும்போது லிட்டருக்கு ரூ.13.02 குறைவாகும். இதனால் தான் கேரளாவை சேர்ந்தவர்கள் மாஹேவிற்கு சென்று பெட்ரோல் - டீசல் நிரப்ப தொடங்கி உள்ளனர். மாஹே என்பது கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களின் பக்கத்தில் அமைந்துள்ளது.

தற்போது தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மாஹேவிற்கு செல்லும் கேரளா வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கண்ணூர், கோழிக்கோடு வழியாக செல்லும் கேரளா மக்கள் மாஹேவில் அதிகளவில் பெட்ரோல் - டீசல் நிரப்பி வருகின்றனர்.

பல்லூர் புறவழிச்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த இடத்தை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் ஏழு பெட்ரோல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு தினசரி 40,000 முதல் 50,000 லிட்டர் வரையிலான பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் கேரளாவில் பெட்ரோல் - டீசல் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சுமார் 55% வரை விற்பனை குறைந்துள்ளது. இதனால் கேரளாவில் பெட்ரோல் - டீசல் விற்பனை குறைந்து அந்த மாநிலத்துக்கான வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

பொதுவாகவே இப்போது மட்டுமின்றி எப்போதும் புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாஹேவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கு பெட்ரோல் - டீசல் மீதான வரி குறைவாக இருப்பது தான். பெட்ரோல் - டீசலை எடுத்து கொண்டால் அதன் அடிப்படை விலையடன் ஒவ்வொரு மாநிலம் - யூனியன் பிரதேசங்களுக்கும் 'வாட்' எனும் மதிப்பு கூட்டு வரியை சேர்க்கின்றன. இது கேரளாவை ஒப்பிடும்போது புதுச்சேரியில் குறைவாக உள்ளது.

அதேபோல் பெட்ரோல் - டீசல் மீது கேரளா அரசு கூடுதல் வரிகளை விதித்துள்ளது. ஆனால் புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் உள்ள மாஹேவில் அப்படியில்லை. இதனால் தான் கேரளாவை ஒப்பிடும்போது மாஹேவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.12 முதல் ரூ.13 வரை குறைவாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+