For Daily Alerts
Just In
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்: தொகாடியா
சென்னை:
அயோத்தியில் கண்டிப்பாக ராமர் கோவில் கட்டப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் பிரவீன்தொகாடியா கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் சந்தேகம் இல்லை. அயோத்தி தவிர, காசி, மதுரா ஆகிய இடங்களில்உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளைை முஸ்லீம் மக்கள் தாங்களாகவே முன் வந்து இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும்.
அது ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். மற்ற எல்லா முயற்சிகளும் தோல்வியைத்தான் சந்திக்கும்.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளதால் இந்தியாவை இந்து நாடாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்என்றார் அவர்.


