பிரியமான தோழி பட திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் உரிமையாளர் கைது
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள கோல்டன் தியேட்டரில் பிரியமான தோழி படத்தின் திருட்டு விசிடிதயாரிக்கப்பட்டதையடுத்து தியேட்டர் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏவி.எம். நிறுவனம் தயாரித்து, விக்ரமன் இயக்கி, மாதவன்- ஜோதிகா நடித்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பிரியமான தோழி. இந்தப் படத்தை யாரும் திருட்டுத்தனமாக விசிடி எடுத்து விடாமல்தடுப்பதற்காக படத்தின் ஒவ்வொரு பிலிம் பிரதியிலும் ரகசிய குறியீடுகள் இடம் பெற்றுள்ளன.
இந் நிலையில் திருத்தணியில் உள்ள கோல்டன் தியேட்டரில் பிரியமான தோழி படத்தை திருட்டுத்தனமாகவிசிடியில் பதிவு செய்வதாக ஏவி.எம். நிறுவனத்திற்குக் தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருட்டு விசிடி தடுப்புப்பிரிவு போலீஸில் ஏவி.எம். நிறுவனம் புகார் கொடுத்தது.
புகாரின் பேரில் விசாரணை நடத்தியபோது, கோல்டன் தியேட்டரில் திருட்டுத்தனமாக விசிடி தயாரிக்கப்பட்டதுஉறுதியானது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர், மேலாளர், ஆபரேட்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தியேட்டருக்கு சீல் வைக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைக்கண்காணிப்பாளர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications