பள்ளி வேன் மீது ரயில் மோதி 4 குழந்தைகள் சாவு: டிரைவர் தப்பினான்
கரூர்:
கரூர் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ஸ்கூல் வேன் மீது ரயில்மோதியதில் 4 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாயினர். கிளீனரும் உயிரிழந்தார். மேலும் 4 குழந்தைகளின்நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ரயில் மோத வருவதை அறிந்த வேனின் டிரைவர் இறங்கி ஒடி உயிர் தப்பிவிட்டான்.
திண்டுக்கல்- ஈரோடுக்கு இடையே சோதனைரீதியில் இந்த ரயில் இயக்கப்பட்டபோது இந்த விபத்து நடந்தது.அந்த ரயிலில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வி.ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகளும் இருந்தனர்.
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வழக்கம் போலவேனில் நேற்று மாலை வீடுகளுக்குக் கிளம்பினர்.
வேனில் டிரைவர், கிளீனர் தவிர 8 மாணவ, மாணவியர் இருந்தனர்.
அப்போது, கரூர்-திண்டுக்கல் ரயில் மார்க்கத்தில், எமூர் என்ற இடத்தில், ஆளில்லா ரயில்வே கிராசிங்கைக் கடக்கவேனின் டிரைவர் கடக்க முயன்றான். ரயில் வருகிறதா என்பதை எல்லாம் பார்க்காமல் தண்டவாளத்தில் வேனைஓட்டியுள்ளான்.
தண்டவாளத்தில் வேனை ஓட்டிய பிறகு தான், சோதனை ரயில் படு வேகத்தில் வருவதை டிரைவர் பார்த்துள்ளான்.இதையடுத்து அவன் மட்டும் வேனில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டான்.
தண்டவாளத்தில் நின்றிருந்த வேன் மீது ரயில் பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளமானது. மேலும் சுமார்300 மீட்டர் தூரத்துக்கு வேனை ரயில் இழுத்துச் சென்றது.
இதில் வேனில் இருந்த 4 பள்ளிக் குழந்தைகள் மற்றும் கிளீனர் ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தனர். இறந்தனர். மேலும் 4 குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமையும் கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தெரிகிறது.
தண்டவாளத்தில் ஏறியவுடன் வேனில் கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டதாகவும், இதனால் தான் விபத்துஏற்பட்டதாகவும் அப் பகுதி மக்களிடம் டிரைவர் கதை விட்டுள்ளான். இப்போது அவன் தலைமறைவாகிவிட்டான்.
அந்த ரயிலில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வி.ஆனந்த், பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் அமர்நாத்உள்ளிட்டவர்கள் பயணம் செய்தனர். சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications