வைகோ மீது குற்றச் சாட்டுக்கள் பதிவு
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக பொடா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் 8 பேர் மீது பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டன.
கடந்த 2002ம் ஆண்டு மதுரை, திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகபேசியதாக கூறி வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பொடா சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக சிறைவாசம் அனுபவித்து வரும் வைகோ உள்ளிட்டவர்கள் மீது இன்று குற்றச்சாட்டுக்கள்பதிவு செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும்,பொதுமக்கள் முன்னிலையில் விடுதலைப் புலிகளை ஆதத்துப் பேசியதாகவும் அரசுத் தரப்பில்குற்றச்சாட்டுக்களாகக் கூறப்பட்டுள்ளன.
நீதிபதி ராஜேந்திரன் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார். முன்னதாக, இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து என்னசொல்ல விரும்புகிறீர்கள் என்று வைகோ உள்ளிட்டவர்களிடம் நீதிபதி தனித்தனியாக கேட்டார்.
அதற்கு வைகோ, நான் குற்றவாளி அல்ல என்று பதிலளித்தார். மற்றவர்களும் இதே பதிலையே அளித்தனர்.
பின்னர் வழக்கு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம்கட்ட நான் தான் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தேன். இதனால் சேது சமுத்திரத் திட்டம் பாதிக்கப்படும் என்பதால்எதிர்க்கிறேன். வேறு எந்தக் காரணமும் அல்ல.
முன்பு பாலம் கட்டுவதை ஆதரித்த ஜெயலலிதா. இப்போது ஏன் திடீரென எதிர்க்க வேண்டும். பாலம் கட்டினால்தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் வரும் என்று இலங்கை அதிபர் சந்திகா குமாரதுங்கா கூறி வருவதைத் தான்ஜெயலலிதாவும் எதிரொலித்து வருகிறார்.
பாலம் கட்டுவது தொடர்பான யோசனை தெரிவிக்கப்பட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. இவ்வளவு நான் கழித்துஇப்போது ஏன் ஜெயலலிதா திடீரென எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றார் வைகோ.
முன்னதாக நிருபர்களைச் சந்திக்க விடாமல் வைகோவை போலீசார் தடுத்தனர். நிருபர்களையும் தடுத்தனர்.இதையடுத்து வைகோவின் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தலையிட்ட வைகோ, என்னை பத்தரிக்கையாளர்களிடம் பேச விடாவிட்டால் போலீஸ் வேனில் ஏறமாட்டேன். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்றார்.
இதைத் தொடர்ந்தே நிருபர்களுடன் பேச வைகோவுக்கு அனுமதி தரப்பட்டது.
திமுகவுடன் கூட்டணி
முன்னதாக நாகப்பட்டிணத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் பேசிய வைகோ, நாடாளுமன்றத் தேர்தலில்திமுகவுடன் மதிமுக கூட்டணி வைத்து மதிமுக போட்டியிடும் என்றார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 18 ஆண்டுகளுக்கு முன் திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடந்த வன்முறைதொடர்பான வழக்கில் ஆஜராக நாகப்பட்டனம் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோஅழைத்து வரப்பட்டார்.
இந்த வழக்கு செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் வைகோ தவிர முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தஇடும்பையன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வைகோவைத் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கில் வைகோ 11-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விசாரணை முடிந்த பிறகு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். அராஜக ஜெயலலிதா இனிதேர்தலில் வெல்லவே கூடாது.
எதிர்கட்சியினர், அரசு ஊழியர்களைப் பழி வாங்கும் செயலில் ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளது. அதிமுகவைத்தோற்கடிக்கும் பொருட்டு திமுகவுடன் கூட்டணி வைப்போம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications