கண்ணாடிகளைத் தின்று தற்கொலைக்கு முயன்ற சேலம் கைதி!
சேலம்:
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலைக் குற்றவாளி ஒருவர் கண்ணாடிகளை பொடியாக்கித் தின்றுதற்கொலைக்கு முயன்றார்.
சேலம் சிறையில் அடுத்தடுத்து திடுக்கிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மாஜி திமுக அமைச்சர் முல்லைவேந்தனை ரெளடி வெல்டிங் குமார் கழுத்தை அறுத்தான். அடுத்து இங்கு கைதிகளுக்கு வார்டனே கஞ்சா விற்றதுகண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது கொலைக் கைதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடந்த 17ம் தேதி, சிறைக் கைதிகளுக்கு கஞ்சா விற்றதாக கூறி சிறை வார்டர் சத்யநாராயணன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு உடைந்தயாக இருந்ததாக கூறி கைதி தாயப்பன் மீதும் புகார் கூறப்பட்டது.இதையடுத்து தாயப்பன் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் தாயப்பன், நேற்று முகம் பார்க்கும் கண்ணாடியை பொடியாக்கி அதை விழுங்கி தற்கொலைக்குமுயன்றார். மிக ஆபத்தான நிலையில் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கஞ்சா விற்பனை தொடர்பாக தாயப்பனை சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாகவும், அதனால்தான் அவர்தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications