• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏமாற்றிய கருப்பு நடிகர், ஆசிர்வதித்த மாமியார், கருவைக் கலைத்த பூட்ஸ்!

By Staff
|

மதுரை:

Janani

தாயார் ரெஜீனாவுடன் ஜனனி

காந்தக் கண் அழகி, கஞ்சா அழகி, மயக்கும் தேவதை என்றெல்லாம் பத்திரிக்கைகளால் வர்ணிக்கப்பட்டு வரும்ஜனனியின் கதை நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.

மதுரை கருப்பாயூரணி, அன்பு நகரில் வசித்து வந்த ரெஜீனாவின் மகளான ஜனனியின் வாழக்கை தடம் மாறியதுதனது தந்தை பாண்டியத் தேவரின் திடீர் மறைவுக்குப் பின்னர் தான்.

கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ஏர்ஹோஸ்டர் கனவில் அழைந்தார். அது தொடர்பான படிப்பில்சேர்ந்தபோது சென்னையில் சில சினிமா புள்ளிகளின் தொடர்பு ஏற்பட சினிமாவில் நடிக்கும் முயற்சியில்இறங்கியுள்ளார்.

இந்த முயற்சிக்கு மதுரையைச் சேர்ந்த முன்னணி நடிகர் கை கொடுக்க முன் வந்தார்.

ஜனனியைத் தன்வசப்படுத்திய அந்த நடிகர், ஜனனியை உடல்ரீதியில் பயன்படுத்திவிட்டு சினிமா சான்ஸ் ஏதும் தராமல்இழுத்தடித்துள்ளார்.

இதனால் அவரை விட்டு விலகி வேறு சில சினிமா புள்ளிகளுடன் பழக ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாகசினிமாவில் பினாமி பெயரில் ஏகத்துக்கும் முதலீடு செய்துள்ள சில முக்கிய பிரமுகர்களின தொடர்பு கிடைத்தது.அப்படிக் கிடைத்த தொடர்பு தான் தில்லை அம்பலத்தாரின் தொடர்பும்.

தன்னை சினிமாவில் சேர்த்துவிடுவதாகக் கூறி அந்த மதுரை நடிகர் செய்த செயல்கள், கூறிய உறுதிமொழிகள்ஆகியவற்றை தனது டைரியில் புட்டுப் புட்டு வைத்துள்ளாராம் ஜனனி. அந்த டைரி இப்போது போலீஸ் வசம்.

Janani

மதுரை நீதிமன்றம் கொண்டு வரப்பட்டபோது

பெயரைக் குறிப்பிடாமல், கருப்பு கரும்பு, மதுரைத் தங்கம், மதுரை நடிகர் என்றுதான் டைரியில்குறிப்பிட்டுள்ளாராம் ஜனனி.

மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் தில்லை அம்பலத்தாருக்கு ஜனனியின் தொடர்பு மிகவும் ஆறுதலாகஅமைந்துவிட இருவரும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றாகியுள்ளனர்.

இது தில்லை அம்பலத்தாரின் தாயாருக்கும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, தனது மருமகள் போயஸ்தோட்டத்தில் குடியேறி தனது மகனை அந்தரத்தில் விட்டுவிட்டதாக மருமகள் மீது கடும் கோபத்தில் இருந்த அந்தஅம்மையார், ஜனனியை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி தில்லை அம்பலத்தாருக்கு ஆசி வழங்கினாராம்.

இதையடுத்து பலமுறை மன்னார்குடியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு ஜனனியை அழைத்துச் சென்றுள்ளார்தில்லை அம்பலம். அப்போது ஒருமுறை ஜனனிக்கு ஆராத்தி எடுத்த தில்லை அம்பலத்தாரின் தாயார், என் புள்ளகாசை யார் யாரோ திங்கிறான். நீ அவனுக்கு நல்ல வாரிசை உருவாக்கித் தாடியம்மா என்று வாழ்த்தியதாகவும்கூறப்படுகிறது.

இதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூட சிலர் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து ஜனனிக்குசென்னை நீலாங்கரையில் கடலோரத்தில் பங்களா வாங்கித் தந்து, மதுரை வீட்டையும் சொந்தமாக்கிக் கொடுத்து,லேட்டஸ்ட் காரும் கொடுத்து, கத்தை கத்தையாய் கோடிகளைகளையும் கொடுத்து, எந்த நேரமும் தொடர்புகொள்ள செல்போன்களையும் கொடுத்து, ராஜாத்தி மாதிரி வாழச் செய்தாராம் தில்லை அம்பலம்.

மேலும் குற்றாலத்தில் பல கோடி மதிப்பில் வசந்த மாளிகையைக் கட்டிக் கொடுத்ததோடு அடிக்கடி இருவரும்அங்கு தான் சந்தித்தும் வந்துள்ளனர்.

பின்னர் தனது பினாமிகளுக்கு எல்லாம் ஜனனியை தில்லை அம்பலத்தார் அறிமுகம் செய்து வைக்க அவர்கள்ஜனனியை அண்ணி என்றே அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

முதலில் வழக்கமான ஏதோ ஒரு பெண்ணின் தொடர்பு தான் என்று அமைதியாக இருந்துவிட்ட, தில்லைஅம்பலத்தாரின் மனைவிக்கு, இது திருமண பந்தத்தில் முடிந்துவிட்ட விஷயம் மிகவும் டென்சனைத் தந்துவிடகஞ்சா கேஸ் பாய்ந்தது என்கிறார்கள்.

Jananiகஞ்சா கேசில் ஜனனியையும் அவரது தாயாரையும் மாட்டிவிட சென்னையில் உள்ள முக்கிய போலீஸ்அதிகாரியிடம் தான் அசைன்மெண்ட் தரப்பட்டாதாம். அவர் தான் தனக்கு மிக வேண்டப்பட்ட அதிகாரிகளைமட்டும் வைத்து மிக ரகசியமாக விஷயத்தை டீல் செய்தாராம்.

இதனால் மதுரை போலீசாருக்கே இந்த கஞ்சா கேஸ் விவரம் மிக லேட்டாகத் தான் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையின்போது தனது வயிற்றில் ஒரு பெண் அதிகாரி வேண்டுமென்றே பூட்ஸ் காலால் எட்டிஉதைத்தாக ஜனனி கூறியிருக்கிறார். இதையடுத்து கடும் ரத்தப் போக்கு ஏற்பட்டு சிகிச்சையும் தரப்பட்டுள்ளது.தில்லை அம்பலத்தாரால் ஏற்பட்ட அவரது கர்ப்பத்தைக் கலைக்கவே அந்த தடாலடி ட்ரீட்மெண்ட் தரப்பட்டதாக,அதிர்ச்சியுடன் கூறுகின்றனர் சில அதிகாரிகள்.

ஜனனி கவனிக்கப்பட்ட விதத்திலேயே நடராஜனின் மற்ற பினாமிகள் மீதும் கஞ்சா வழக்கு பாயும் என்கிறார்கள்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X